சனி, 22 ஜனவரி, 2011

பிடிக்காத பத்து பேர்

01. புத்தகம் படிக்கவே நேரமில்லையென
பெருமையாய் சொல்லிக் கொள்பவர்.
02. காதுகளுக்குள் பவுடர் அடித்துக்
கொண்டு வருபவர்.
03. பார்த்த அடுத்த நிமிடமே அரசியல்
பேச ஆரம்பிப்பவர்.
04. குழந்தைகளை ரைம்ஸ் சொல்லச்
சொல்லி நிர்பந்திப்பவர்.
05. எல்லோரையும் தோழரென விளிக்கும்
போலி புரட்சிக்காரர்.
06. இந்தக் காலத்துப் பசங்களுக்கு என்ன
தெரியுமென அங்கலாய்ப்பவர்.
07. ஆகச் சிறந்தவை அனைத்தும் நம்
மொழியில் மட்டுமே என வாதிடும்
தமிழ் அன்பர்.
08. அம்பானி அடுக்கு மாடி கட்டினாலும்,
டாட்டா பேட்டா வாங்கினாலும்
கொந்தளிக்கும் போராளி.
09. நேரில் பேசும் போது மேலாடையைத்
திருத்திக் கொண்டெ பேசுபவர்.
10. எதிர்படும் அழகான பெண்ணுடன்
வரும் அவரின் கணவர்.

9 கருத்துகள்:

ரிஷபன் சொன்னது…

நிஜமும் இருக்கு.. குறும்பும் இருக்கு..

Harani சொன்னது…

ayyaa saamy ithellam romba kurumbuthaan. Enakku oruthar oree samayam mattum pidikkaathu. athu neethan ippadi idaiveli vittu vanthu ezhuthum pothu mattum. nallaa irukkuppa.

Dear friend my tamil font corrupted. sorry for the inconvenience.

பத்மா சொன்னது…

antha last aal pavvam

ஹேமா சொன்னது…

பிடிக்காதவர்கள் பட்டியலுக்குள் இருப்பவர்கள் சிலரை எனக்கும் பிடிக்காது !

சுசி சொன்னது…

கடைசி.. நச்.. :)

siva சொன்னது…

:)

சுந்தர்ஜி சொன்னது…

எனக்கென்னமோ ஒம்பதாவது பத்தாவது பாயிண்டுக்காக முதல் எட்டுப் பாயிண்டையும் லிஸ்ட்ல சேத்துட்டீங்களோ மது?

ச்சும்மா ஜாலிக்காக இது.என்னோட பத்தும் இதுக்குக் கரெக்டாப் பொருந்துது.

Thanglish Payan சொன்னது…

enge,
ungaleye ungalukku pidkkathu nu solliruvinga nu payanthutten.. :)

intha blog la mokkaiya ethavathu podum avarkalayum enakku pidikkala.. ( Just for fun :) )

கே. பி. ஜனா... சொன்னது…

பிடித்த பத்துப் பேர்?