சினிமா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சினிமா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 19 ஜனவரி, 2012

KEY


இந்தத் தெலுங்குப் படம் என்னை மிகவும்
வசீகரித்தது. எவ்வித மசாலாக்களும்
இல்லாப் படம்.

ஒன்பது பேர்கள்.
ஒரு வேலைக்கான எழுத்துத் தேர்வு.
கேள்வித்தாளில் வெறுமை.
கேள்வியைக் கண்டுபிடித்து
பதில் எழுத வேண்டும்.
சில விதிகள்.
சில விதிமீறல்கள்.
90 நிமிடங்கள்.

சுவராஸ்ய விரும்பிகள்
தவற விடக் கூடாத்
திரைப் படம்.

ஞாயிறு, 12 ஜூன், 2011

ஆரண்ய காண்டம்



வெள்ளித்திரையில் விரிந்த
ஆச்சர்யம்.
தியாகராஜன் குமாரராஜா
மிகவும் அற்புதமாய்
இயக்கியுள்ளார்.
சம்பத்.
சோமசுந்தரம்.
வசந்த்.
ஜாக்கிஷெரஃப்.
இந்த வரிசையில்
அசத்துகிறார்கள்.
யுவன் பாடல்கள்
இல்லாமலே
வசீகரிக்கிறார்.
வசனமும்,ஒளிப்பதிவும்
உயர் ரகம்.
இந்தப் படத்திற்கு
நாம் செய்யும்
நியாயம் இதைத்
தியேட்டரில்
பார்ப்பதுதான்.
தயாரிப்பு எஸ்.பி.பி.சரண்.
ஒரு பூங்கொத்து
அப்பாவுக்கும்,பிள்ளைக்கும்.

திங்கள், 7 மார்ச், 2011

சாருலதா



மீண்டும் ஒரு முறை
சத்யஜித்ராயின்
சாருலதாவைப்
பார்க்கும்
சந்தர்ப்பம்
வாய்த்தது.
இந்த முறை
சப் டைட்டிலுடன்.
கத்தி மேல் நடையல்ல;
கத்தி மேல்
ஓடியிருக்கிறார்
ராய்.
இயக்குனரின்
விரல்களுக்கு
முத்தமிடும்
ஆசை மேலிடுவதைத்
தவிர்க்க முடியவில்லை.
எல்லா ஆசைகளும்
நிறைவேறி
விடுகிறதா என்ன?

வியாழன், 16 டிசம்பர், 2010

ரத்த சரித்திரம்


முகத்தில் ரத்தம் தெறிக்கும் படம்.
மற்றுமொரு ராம்கோபால் வர்மா படம்.
முதல் படம் ஷிவாவில் கலக்கியது போல்
இதிலும்.
ஆந்திரா அரசியலில் எவ்வளவு ரத்தம்
கலந்துள்ளது என்பதை வெளிப்படுத்திய
படம். மிக வன்முறைப் படம் என்று
எல்லோராலும் முத்திரைக் குத்தப்பட்டாலும்
உண்மைக் கதை இதைவிட பலமடங்கு
ரத்தக் கறை படிந்தது.
பரிதலா ரவி என்பவரின் கதையை
காங்கிரஸ்,தெலுங்கு தேசம் கட்சிகள்
எப்படி புனைந்தன என்பதைப்
பார்க்கும் போது படம் உண்மைக்குத்
துரோகம் செய்யவில்லை என்றே
படுகிறது.
விவேக் ஓபராய் மிக நேர்த்தியாகச்
செய்துள்ளார்.
சாக்லேட் பையன் சூர்யா இன்னும்
போக வேண்டிய தூரம் இருக்கிறது.
அவர் இன்னமும் உக்கிரம்
பழகவில்லை.
ஓபராயின் மனைவியாக வரும்
ராதிகா ஆப்தே நடிப்பில்
மட்டுமல்ல அழகிலும் வசீகரிக்கிறார்.

திங்கள், 6 டிசம்பர், 2010

THE SONG OF SPARROWS



இரானிய இயக்குனர் மஜீத் மஜீதியின் மற்றுமொரு
அற்புதமான படம். நெருப்புக் கோழிப் பண்ணையில்
வேலை பார்க்கும் ஒரு கிராமத்து மனிதன் நகரத்திற்கு
வந்த பின் எவ்விதம் மாறுகிறான் என்பதைச் சொல்லும்
படம். கிட்டதட்ட இவரின் எல்லாப் படத்திலும்
குழந்தைகள் பிரதான பாத்திரம் வகிக்கிறார்கள்.
நான் ரசித்த இரண்டு விஷயங்கள்.
தந்தை வேலை முடிந்து வந்ததும் ஓடிச் சென்று
குழந்தைகள் எனக்கு என்ன வாங்கி வந்தீர்கள்
என்று ஆவலாய்க் கேட்கும் இடம்.
வாகனங்கள் விரையும் சாலையில் குழந்தைகள்
பூங்கொத்து விற்கும் இடம்.
மற்றும் பல விஷயங்கள் இந்தியச் சூழலைப்
பிரதிபலிக்கின்றன.
இவரின் " children of Heaven " திரையில்
ஒளிரும் ஒரு சொர்க்கம்.

திங்கள், 20 செப்டம்பர், 2010

Udaan


ஹிந்தி திரைப்படம்.
சப்-டைட்டில் தயவில் பார்த்த படம்.
மிக அற்புதம் என்று சொன்னால் மிகையாகாது.
ரோஹன்.
ஹாஸ்டல் சுவரைத் தாண்டிக் குதித்து சினிமா
பார்க்கச் செல்கிறான் நண்பர்களுடன். அங்கே வார்டன்
அவர்களைப் பார்த்து விட பள்ளியிலிருந்து
விரட்டப் படுகிறான்.
எட்டு வருடங்கள் ஹாஸ்டலில் தன்னை வந்து
பார்க்காத தந்தையிடம் வந்து சேர்கிறான்.
அர்ஜுன் இன்னொரு பெண் மூலமாக அவன்
தந்தைக்குப் பிறந்த சிறுவன். இருவரும்
தாயை இழந்தவர்கள்.
ரோஹனுக்கு எழுத்தாளனாக வேண்டும் என்பது
கனவு. கவிதைகள் எழுதுகிறான்.
அவன் அப்பா சொல்கிறார். எழுத்தாளனாக
விட மாட்டேன். பட்டினி கிடந்து சாகப் போகிறாய்.
அவன் அப்பா சர்வாதிகாரி. அவரை பையன்கள்
சார் என்றுதான் அழைக்க வேண்டும்.
ரோஹனை பொறியியல் படிக்க வைக்கிறார்.
மீதப்பட்ட நேரத்தில் தன் ஃபேக்டரியில் வேலை
பார்க்க வைக்கிறார்.
சிறுவன் அர்ஜுனை தந்தை பெல்ட்டால்
அடிக்கிறார்.
தந்தை மூன்றாவது பெண்ணை திருமணம்
செய்ய ரோஹன் அர்ஜுனை அழைத்துக் கொண்டு
கவிதைகளுடன் மும்பை செல்கிறான்.
ஜனரஞ்சக பத்திரிக்கையில் வரும்
தொடர் போன்ற சாயலில் கதை இருந்தாலும்
சிறுவர்கள் நடிப்பில் பின்னுகிறார்கள்.
உதிரிப்பூக்களை கொஞ்சம் ஞாபகப் படுத்துகிறார்கள்.
அமித் திரிவேதி இசையில் சில உச்சங்களைத்
தொடுகிறார்.
படத்தில் அனுராக் காஷ்யப்பின் பங்கும் உள்ளது.
இவர் பிளாக் ஃபிரைடே,தேவ் டி போன்ற மிகச்
சிறந்த படங்களை இயக்கியவர்.
இப்படம் 2010 கேன்ஸ் திரைப்பட விழாவில்
பங்கு பெற்றது.
விக்ரமாதித்யா இயக்கியுள்ளார்.

பி.கு : இப்படத்தை தயவு செய்து தமிழ் படத்துடன்
ஒப்பிட்டுப் பார்த்து ஆதங்கப் பட வேண்டாம்.
காலமெல்லாம் ஆதங்கப் பட்டுக் கொண்டேயிருக்க
வேண்டும்.

செவ்வாய், 4 மே, 2010

ஹிந்தி நஹி மாலும்


சமீபத்தில் ரசித்த ஹிந்திப் படங்கள்( சப்டைட்டிலுடன்)

THE LAST LEAR
DEV D
KAMINEY
TAHAAN
DASVIDANIYA
ROCK ON
FASHION
3 IDIOTS
DILKABADDI
SAAS BAHU AUR SENSEX

ஞாயிறு, 14 மார்ச், 2010

கெளதம் வாசுதேவ மேனனுக்கு ....

தாமதமாகத்தான் ”விண்ணைத்தாண்டி வருவாயா” ப்
பார்த்தேன். சேட்டைச் செய்யாத சிம்புதான் படத்தின்
தரத்திற்கான சான்றாய் அனைவராலும் சொல்லப்படுவது
ஆச்சரியமூட்டுகிறது .
காதலும் காதலைச் சார்ந்த வலியும் எப்போதும்
சுவாரசியம் தான். ஆனால் ஒரு நல்ல படத்திற்கான
தகுதி அதுமட்டுமல்ல என்பது மேனனுக்கு
தெரியாமல் இருந்திருக்க வாய்ப்பில்லை.
காதலுக்கு மதம் தடை என்பது அரைத்து அரைத்துப்
புளித்துப் போன கரு.
இது இன்னமும் காதலர்களுக்கு நடந்துக்
கொண்டுதானிருக்கிறது எனும் சால்ஜாப்புகளைத்
தவிர்த்து விட்டுதான் பார்க்கவேண்டியிருக்கிறது.
கதை சொல்லும்விதம், படமாக்கும் விதம்,
வசனம் இன்னபிற விஷயங்களில்
செலுத்தும் புதுமையை
கதையிலும் காட்டலாம்.
பாராட்டப் பட வேண்டிய விஷயம்
கதைக்கு உதவியான
photography.
மேனனுக்கும் ஹாரிஸ் ஜெயராஜுக்கும்
இருந்த chemistry இந்த கூட்டணியில்
missing.
கடைசியாய் ஒன்று.
இரண்டு climax எடுத்திருந்தது
உண்மையென்றால்
சொல்லும் கதைக்கு அது
நேர்மையாகுமா?

செவ்வாய், 9 மார்ச், 2010

OSCAR

AVATAR படம் பார்க்கும் போது பிரமிப்பு மட்டுமே
ஏற்பட்டது. அது தொழில் நுட்பத்தால் ஏற்பட்ட
பிரமிப்பு. ஒப்பிடுவது சரியில்லை என்றாலும்
TITANIC பார்த்தபோது ஏற்பட்ட நெகிழ்வு இதில்
இல்லை. ஆனால் அனைத்து பத்திரிக்கைகளும்
உச்சக்கட்ட புகழ்ச்சியை அவதாருக்கு வழங்கின.
ஆகச் சிறந்த படம் இதுவென தீர்ப்பு வழங்கின.
மனசுக்கு நெருடலாய் தான் இருந்தது.
Oscar Result தெரிந்ததும்தான் அது விலகியது.
KATHRYN BIGELOW தன்னுடைய
THE HURT LOCKER க்காய் சிறந்த டைரக்டர் மற்றும்
சிறந்த படத்திற்குமான விருதைப் பெற்றிருக்கிறார்.
இவ்விருது பெற்ற முதல் பெண்மணி இவரே.
மகளிர் தினத்தில் விருது கிடைத்தது சிறப்பு.

THE HURT LOCKER நகரமும் இல்லாத கிராமமும்
இல்லாத எஙகளூருக்கு எப்போது வரும் என்று
தெரியாத சூழலில் படத்துக்குச் சம்பந்தமில்லாச்
செய்தி ஒன்று சொல்லவேண்டியுள்ளது.

இப்போட்டியில் தோல்வியடைந்த அவதார்
டைரக்டர் JAMES CAMERON ன் முன்னாள்
மனைவிதான் KATHRYN BIGELOW.

இதுதான் POETIC JUSTICE என்பதா?