சனி, 21 மே, 2011

விருதுகள்சிறந்த திரைப்படங்களுக்கும்
அதன் ஆக்கத்தில் துணை
நின்றவர்களுக்கும்
தேசிய அளவில் அங்கீகாரம்
கிடைத்துள்ளது.
தமிழ் படங்கள் அதில்
முன்னணியில்
நிற்பது மிகவும்
சந்தோஷமான விஷயம்.
பல தலைகளுக்குக்
கிடைக்காத
சிறந்த இயக்குனர் விருது
இரண்டாவது படத்திலேயே
வெற்றிமாறனுக்குக்
கிடைத்திருக்கிறது.
குருவுக்கேற்ற(பாலுமகேந்திரா)
சிஷ்யன்.

புதன், 11 மே, 2011

புதிய பூவடக்கு காஷ்மீரில் இஸ்லாமியர்கள்
பெரும்பான்மையாக வசிக்கும்
உஸ்ஸன் என்ற கிராமத்தில்
நடந்த பஞ்சாயத்துத் தேர்தலில்
முதன் முறையாக ஆஷா ஜீ என்ற
காஷ்மீரீ பண்டிட் வகுப்பைச்
சேர்ந்த பெண்மணி தேர்ந்தெடுக்கப்
பட்டிருக்கிறார். அவரை எதிர்த்து
போட்டியிட்டவர் சர்வா பேகம்
என்னும் இஸ்லாமியர்.
தேர்தல் முடிவு வெளியாகியதும்
இஸ்லாமியர்களும்,இந்துக்களும்
ஒன்று கூடி அவருக்கு வாழ்த்து
தெரிவித்திருக்கிறர்கள்.அவரை
எதிர்த்துப் போட்டியிட்ட
பெண்மணி உட்பட.
மற்ற பிரதேசத்தில்
நடந்திருந்தால் இது ஒரு
சாதாரண விஷயம்.
அரசியல்வாதிகளாலும்,
மதவாதிகளாலும் எரிந்து
கொண்டிருக்கும் காஷ்மீரில்
பூத்திருக்கும் முதல் பூ
இதுவெனச் சொல்லலாம்.
எப்போதும் விடியல்
மெலிதான கீற்று போலத்தான்
ஆரம்பமாகிறது.