வெள்ளி, 11 மார்ச், 2011

மாற்று வழி

தேர்தல் வருகிறது.
கண் முன்னே இரண்டு கட்சிகள்.
ஒன்று

மற்றொன்று

தோழர்களோ
அம்மாவிடம்
துண்டு ஏந்தி
நிற்கிறார்கள்.
வாழ்வதற்கு
ஏதேனும்
வழி கிடைக்குமா
ரஜினி மற்றும்
விஜய்
அவர்களே?

திங்கள், 7 மார்ச், 2011

சாருலதா



மீண்டும் ஒரு முறை
சத்யஜித்ராயின்
சாருலதாவைப்
பார்க்கும்
சந்தர்ப்பம்
வாய்த்தது.
இந்த முறை
சப் டைட்டிலுடன்.
கத்தி மேல் நடையல்ல;
கத்தி மேல்
ஓடியிருக்கிறார்
ராய்.
இயக்குனரின்
விரல்களுக்கு
முத்தமிடும்
ஆசை மேலிடுவதைத்
தவிர்க்க முடியவில்லை.
எல்லா ஆசைகளும்
நிறைவேறி
விடுகிறதா என்ன?