வியாழன், 17 ஜூன், 2010

கொஞ்சம் கவிதைகள்

வனம் புகும்
ஆசைக்கான
திரி தூண்டல்
ஓர் ஓக் மரத்தின்
காற்றுக்கான
எதிர்வினையின்
போது
நிகழ்ந்திருக்கலாம்.

*********************

பூனை
தடம் பதிக்கும்
மெல்லொலி
கேட்டு
கண்
விழிக்கிறதென் கனவு.

**********************

தயவு செய்து
நிறுத்துங்கள்
நிரம்பி
வழிகிறதென்
கோப்பை.

14 கருத்துகள்:

சுசி சொன்னது…

பூனை பிரமாதம்.

ஹேமா சொன்னது…

பூனையின் மெல்லிய பாதத்துள் தொலைகிறது என் கனவு.

மது....நாங்கள்தான் நிரப்பப்பட்டுக்கொண்டிருக்கிறோம் உங்கள் கவிதைகளால்.

Madumitha சொன்னது…

நன்றி சுசி.
நன்றி ஹேமா.

பேநா மூடி சொன்னது…

நல்லா இருக்கு..

பேநா மூடி சொன்னது…

நீங்க தஞ்சாவூரா :-)

கமலேஷ் சொன்னது…

ஒரு ஜென் கவிதைக்குள்ள தரம் அப்படியே இருக்கு தோழி..மூனுதுக்கும்...
பசியில படிக்கும் பொது ஒரு கதை சொல்லுது...
சாபிட்டுட்டு வந்து பார்த்தா வேற கதை பேசுது...
பல பரிமாணம் ஒவ்வொரு கவிதைக் குள்ளும்...
வாழ்த்துக்கள் தொடருங்கள்...

Madumitha சொன்னது…

நன்றி பேநாமூடி. ஆம் தஞ்சாவூர்தான்.
நன்றி கமலேஷ். என் பெயர்
சந்தானகிருஷ்ணன். எழுதும்போது
மட்டும் மதுமிதா.

வெறும்பய சொன்னது…

நல்லா இருக்கு..

ரிஷபன் சொன்னது…

கொஞ்சும் கவிதைகள்!

ரிஷபன் சொன்னது…

கொஞ்சும் கவிதைகள்!

ஜெய்லானி சொன்னது…

ஏன் ஃபோலோயர் விட்ஜட் வக்க வில்லை..

சி. கருணாகரசு சொன்னது…

பூனை
தடம் பதிக்கும்
மெல்லொலி
கேட்டு
கண்
விழிக்கிறதென் கனவு.//

கவிதை நச்!

Madumitha சொன்னது…

நன்றி
வெறும்பய
ரிஷபன்
ஜெய்லானி
கருணாகரசு.
ஜெய்லானி சார்..
ஃபாலோயர் விட்ஜட் போடமுடியலை.

சுந்தர்ஜி சொன்னது…

இதப் படிக்க கொஞ்சம் லேட்டாயிடுச்சேன்னு இருந்தது மதுமிதா.

நிரம்பி வழியும் கோப்பையில் ஸென்னின் நெடி.

பூனையின் பாதவொலியில் கண்விழிக்கிறது கவிதை.

சபாஷ் மது.