வெள்ளி, 20 ஆகஸ்ட், 2010

கொஞ்சம் இளைப்பாறிக் கொள்ள

விளையாட்டுக்களால்
கரை புரண்டு
ஓட வேண்டிய
குழந்தைகளின்
மாலைப் பொழுதுகள்
வீட்டுப் பாடங்களால்
தேங்கி நாறுகின்றன.

******************

எல்லாருக்கும்
பிடித்தவனாய்
இருக்கும்
முயற்சியில்
என்னையே
பிடிக்காமல்
போனது.

*****************

அவிழ்த்து
வைத்த
ஊஞ்சல்
ஆடிக்
கொண்டிருக்கிறது
மனசுக்குள்.

*****************

7 கருத்துகள்:

சுசி சொன்னது…

2
3
1

:))))

Bala சொன்னது…

//எல்லாருக்கும்
பிடித்தவனாய்
இருக்கும்
முயற்சியில்
என்னையே
பிடிக்காமல்
போனது.

இது டாப்பு.

இயல்பாய் இருத்தலே எல்லோருக்கும் பிடிக்கும், நமக்கும்.

ஹேமா சொன்னது…

இரண்டாவது உண்மை மது.

ரிஷபன் சொன்னது…

எல்லோருக்கும் பிடிக்கிற கவிதைகள்..

பத்மா சொன்னது…

உண்மை நெத்தியடியாய் ....
ரசித்தேன்

r.v.saravanan சொன்னது…

எல்லாருக்கும்
பிடித்தவனாய்
இருக்கும்
முயற்சியில்
என்னையே
பிடிக்காமல்
போனது.

super madhu

சுந்தர்ஜி. சொன்னது…

முதலாவது என்னை உசுப்பியது.இந்தப் புண்ணாக்குக் கல்விமுறை மீது விசிறியடிக்கப்பட்ட கவிதையானதால் கூடுதல் ப்ரியம்.

மற்ற ரெண்டும் நண்பா!உன் தூரிகையில் நான் எப்போதும் பார்க்க விரும்பும் மென் ஓவியங்கள்.