ஞாயிறு, 26 செப்டம்பர், 2010

Form-16


அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஆத்மாக்கள்
அனைவரும் அறிந்த விஷயம் இந்த Form-16.
ஒவ்வொரு வருஷமும் மார்ச் முடிந்ததும்
அலுவலகத்தில் ஒரு அய்யா கை எழுத்து
போட்டு இதை கொடுப்பார். அதில் அந்த
வருடம் முழுதும் நாம் பெற்ற சம்பளம்
பிடித்த வருமான வரி போன்ற விபரமும்
இருக்கும். இதைக் கொண்டு போய்
வருமான வரி அலுவலகத்தில் தாக்கல்
செய்ய வேண்டும். அதற்கு ஏகப்பட்ட
கெடுபிடி. வருமான வரி அலுவலகத்தில்
பிச்சைகாரனை பார்ப்பது போல் பார்ப்பார்கள்.
ரிட்டர்ன் ஃபைல் பண்னலைன்னா அபராதம்.
மிரட்டல் பத்திரிக்கைகளில் விளம்பரம்.
நிற்க.
அக்டோபர் ஒண்ணாம் தேதி எந்திரன் ரிலீஸ்.
படத்தயாரிப்புக்கான செலவுகளை கோடியில்
எழுதுகிறார்கள் எல்லா பத்திரிக்கைகளிலும்.

பி.கு : எந்திரன் இசை வெளியீட்டு விழா.
வெளியீட்டு விழாவை தயாரித்த விழா.
டிரய்லர் வெளியீட்டு விழா.
டிக்கட் முன்பதிவு.
ஜாக்கிரதை.
அடுத்த வாரம் எந்திரனில் இடைவேளை
விட்டாச்சு விழா.

8 கருத்துகள்:

ஹேமா சொன்னது…

மது சுகம்தானேஎ !பதிவுகள் வித்யாசமாய் இருக்கிறதே !

சுசி சொன்னது…

:))

Harani சொன்னது…

மதுமிதா...

வருமான வரி என்பது வருமானமே இல்லாதவனுக்கு..அதாவது சாலையோர பிளாட்பார பூக்காரியிடம்
பூவும் வாங்கிகொண்டு லஞ்சமும் வாங்கிகொண்டு விரட்டும் காவல்துறையினரைப்போலவே வருமானவரித்துறை இல்லாதவனைத் துரத்திப் பிடிப்பார்கள்..இருப்பவனிடம் துர்ர்ந்துபோவார்கள். பிறந்தது முதல் இன்று வாழும்வரை வயதுக்கு ஒரு கோடி என்று கணக்கு பார்த்தால்கூட ஒவ்வொரு அரசியல்வாதியும் வயதுக்கு மீறி பத்துமடங்கில் கோடிகோடியாய் வைத்திருக்கிறார்கள்..இதற்கு....?
நல்ல பதிவு.

சுந்தர்ஜி. சொன்னது…

வருமானத்தின் மீதான வரி என்கிற அடிப்படையே தவறானதும் ஊழலுக்கு இடம் தருவதும்.பெண்ணிடம் வயதைக் கேட்பது போல் பொதுஜனத்திடம் வருமானத்தைக் கேட்பது.நாற்பது வருஷங்களுக்கு முந்தைய நாட்டுக்குப் பொருத்தமான வரியீட்டும் பாணிதான் நம் வசமுள்ள வரித்திட்டம்.மாற்றுத் திட்டமும் மிக எளிதாக எல்லோருக்கும் பொருந்தும் விதமாக ஊழலுக்கு இடமளிக்காததாக உடனடியாக நடைமுறைப் படுத்தக்கூடியதாக டிசைன் பண்ண மூளைகள் நிறையவே இருக்கிறது.

ஆனால் சிவாஜி முதல் இந்தியன் முதல் அந்நியன் முதல் ரோபோ முதல் முதல்வன் ஜெண்டில்மேன் முதல் தொண்டையில் சிக்கிய முள்ளாய் ஷங்கரைத் துரத்தும் கெட்ட கனாவை நாமும் கண்டு நோகவேண்டியிருக்கிறது.

சாபம் வரமாகிறது மதுமிதா- சில நேரங்களில்.

Vel Kannan சொன்னது…

மிகவும் தீவிரமான பிரச்சனையை நையாண்டியுடன் சொல்லியிருப்பது 'சுள்' என்று குத்துகிறது. என்ன செய்யப்போகிறோம் நாம் ... ? (சரி நண்பரே , கோடி கோடி என்கீறார்களே .. அப்படியென்றால் ....)

கயல் சொன்னது…

:)

ரிஷபன் சொன்னது…

அவர்களும் வரி கட்டுவதாய்த்தான் சொல்கிறார்கள். ஆனால் எந்த தொகைக்கு என்றுதான் புலனாகா மர்மம். அலுவலகத்தில் வேலை பார்ப்பவன் ஒரு பைசா கூட ஒளிக்கமுடியாது.

கமலேஷ் சொன்னது…

நிறைய யோசிக்கணும்.