திங்கள், 4 அக்டோபர், 2010

துளிகள்

அயோத்தி வழக்கு பற்றிய லக்னோ உயர் நீதிமன்ற தீர்ப்பு
குறித்து ஊடகங்களும், இந்து அமைப்புகளும் தங்கள்
திருப்தியினை பதிவு செய்துள்ளனர்.
இது குறித்து ரொமிலா தாப்பர் ஒரு விமர்சனம்
வைத்துள்ளார்.
இது ஒரு அரசியல் தீர்ப்பு.
பல ஆண்டுகளுக்கு முன்னால் அரசே எடுத்திருக்கக்
கூடிய ஒரு முடிவை இது பிரதிபலிக்கிறது.
இந்தத் தீர்ப்பு மத அடையாளங்களை உள்ளடக்கிய
தற்கால அரசியலின் சிக்கலையும்பிரதிபலிக்கிறது.
சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்ட
ஒரு மசூதி ஒரு கும்பலினால் திட்டமிடு இடித்து
நொறுக்கப் பட்டது. ஒரு அரசியல் தலைமையினால்
இது ஊக்குவிக்கப் பட்டது. திட்டமிட்டு செய்யப்பட்ட
இந்த அழிவுச் செயலைக் குறித்து நீதிமன்றம்
எதுவும் கூறவில்லை. ஊகித்துக் கருதப்படும்
கோவில் தகர்க்கப் பட்டது கண்டனம் செய்யப்
பட்டுள்ளது.
ரொமிலா தாப்பர் பழங்கால இந்தியா பற்றிய
ஒரு புகழ் பெற்ற வரலாற்றாசிரியர்.

**********************************************

எந்திரன் குறித்த விமர்சனத்தை விட எந்திரனின்
அரசியல் படு சுவாரஸ்யம்.
எங்கள் ஊரில் ஒரு தியேட்டர் நீங்கலாக மற்ற
அனைத்து தியேட்டர்களிலும் எந்திரன் ரிலீஸ்.
ஒரு டிக்கெட் ரூ.300.
இதுதான் முதலாளித்துவ பொதுவுடமை
சித்தாந்தமோ?

*********************************************

ரஜினி வீட்டு விசேஷத்தில் பாடிய அருணாசாய்ராம்
ரஜினியின் பாராட்டுக் கேட்டு பரவசமானார் என
பத்திரிக்கையில் ஒரு செய்தி வந்துள்ளது.
அருணாவின் ’என்ன கவி பாடினாலும்’
’மாடு மேய்க்கும் கண்ணே’ இன்ன பிறவற்றிலும்
மோகித்துக் கிடக்கும் எனக்கு இந்த செய்தி
ஆச்சர்யத்தை கொடுக்கிறது.
மேதைகளும் மனிதர்கள் தான்.

5 கருத்துகள்:

Vel Kannan சொன்னது…

1. உண்மையான விமர்சனம்.
2. எங்கள் ஊரிலும் ஐந்து திரையரங்கத்தில்.(Rs. 80 to 150)
3. இந்த சந்தேகம் எனக்கும் உண்டு.
பெரும் படைப்பாளிகளும் இவற்றில் அடங்குவர்.
எண்ணங்களின் பகிர்வுக்கு நன்றி

ஜெயந்தி சொன்னது…

நல்ல கருத்துக்கள்.

கமலேஷ் சொன்னது…

மிக நல்லா பதிவு...
எழுத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திவிட்டீர்கள் போல..

கயல் சொன்னது…

நல்ல தொகுப்பு

சே.குமார் சொன்னது…

மிக நல்ல பதிவு.