புதன், 27 அக்டோபர், 2010

துளிகள்



எந்திரன் பார்த்தாச்சு..ஷ்.. அப்பாடா... என் பையன்
பார்க்கிற வீடியோ கேம்ஸ் எவ்வளவோ தேவலை.
ஒரே ஆறுதல் இடைவேளை வரை புன்னகைக்க
வைக்கிற சுஜாதாவின் வசனம்.




ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியர்களை உதைக்கிறார்கள்.
இந்திய மண்ணில் ஆஸ்திரேலியர்களை உதைத்திருக்கிறோம்.



தேனீக்களை வளர்க்கும் பெட்டியில் வெல்லப் பாகுடன்
தேனீக்கள் இறந்து போகாமல் இருக்க நான்கு வகை
ஆன்ட்டி பயாட்டிக் மருந்துகளை கலக்கிறார்கள். இந்த
மருந்து கலக்கப் பட்ட வெல்லப் பாகினை தான்
தேனாக நாம் பருகிக் கொண்டிருக்கிறோம். மருத்துவம்
சொல்கிறது அதிக ஆன்ட்டி பயாட்டிக் உடலுக்கு விஷம்.
இனிக்கும் விஷம்.



மணிப்பூரைச் சேர்ந்த ஷர்மிளா என்ற மனித உரிமையாளர்
பத்து வருடங்களாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
அரசு கட்டாயப் படுத்தி நாசி வழி திரவ உணவு கொடுத்து
வருகிறது. ஷர்மிளாவின் உடல் நலிந்து கொண்டே
இருக்கிறது. ஆயுதப் படைக்கு இருக்கின்ற சிறப்பு
உரிமைகளை தடை செய்யச் சொல்லி போராடிக்
கொண்டிருக்கிறார்.சிறப்பு உரிமை என்பது எந்த நேரத்திலும்
ஆண்களை சித்திரவதை செய்து கொல்லவும், பெண்களை
வன்புணர்ந்து கொல்லவும் உபயோகிக்கப் படுவது. இதே
காரணத்திற்காக முன்பு பெண்கள் நிர்வாண போராட்டம்
நடத்தியது ஞாபகத்திலிருக்கக்கூடும்.



லியூசியாபோவுக்கு இந்த வருட அமைதிக்கான
நோபல் விருது . சீன அரசு இவருக்கு
பதினோரு வருட சிறை தண்டனை விதித்துள்ளது.
காரணம் இவர் ஒரு மனித உரிமைப் போராளி.
தியான்மென் சதுக்கத்தில் நடைபெற்ற மனித
படுகொலையை எதிர்த்து எழுத ஆரம்பித்தவர்.
இவர் உரிமைச் சாசனம் ஒன்றை தயாரித்து
வெளியிட்டுள்ளார். இந்த உரிமைச் சாசனம் 08
என்பது 350 மேற்பட்ட சீன அறிஞர்களால் முதலில்
கையெழுதிடப்பட்ட உரிமைப் பிரகடனச் சாசனம்
ஆகும். இது சீனாவில் சர்வதிகாரம் முடிக்கப்பட்டு,
மக்களாட்சி வர வேண்டும் என்றும், மனித
உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்றும் வேண்டுகிறது
மிகச் சரியாக பதினோரு வருடங்களுக்கு முன்
ஆங் ஸாங் சூ கி என்ற பர்மிய அரசியல் போராளிக்கு
நோபல் அமைதி பரிசு கிடைத்தது. இவரும் இன்னமும்
சிறையில் தானிருக்கிறார். இந்த நேரத்தில்
காந்திக்கு நோபல் மறுக்கப் பட்டது குறித்து
நோபல் கமிட்டி சொல்லி வரும் சால்ஜாப்புகள்
ஞாபகத்திற்கு வருவதைத் தடுக்க முடியவில்லை.

5 கருத்துகள்:

சுசி சொன்னது…

நல்ல தகவல்கள்.

ஷர்மிளாவோட போராட்டம் ஜெயிக்கணும்.

ரிஷபன் சொன்னது…

தகவல்கள் எல்லாமே தனித்தனி ரகம் ஒட்டு மொத்தமாய் ”அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை”

ஹ ர ணி சொன்னது…

தருமத்தின் வாழ்வதனை சூது கவ்வும் மறுபடியும் தர்மம் வெல்லும் என்பது பாரதி கூற்று. சர்மிளாவின் போராட்டம் நிச்சயம் தர்மத்தின்பாற்பட்டது வென்றே நிற்கும்.

vasan சொன்னது…

'கல்க‌ண்டு' போலிருக்கிற‌து.
(த‌மிழ் வாணன் எழுதிய‌து.)

போளூர் தயாநிதி சொன்னது…

nalla aakkam
polurdhayanithi