திங்கள், 25 ஏப்ரல், 2011

எண்டோசல்ஃபான் எனும் உயிர்க்கொல்லி


எண்டோசல்ஃபான் என்னும் பூச்சிக் கொல்லி
மருந்து உபயோகத்தில் உள்ளது. குறிப்பாக
முந்திரி மரங்களுக்கு அடிக்கப் படுகிறது. இதன்
பின்விளைவுகள் மிகப் பயங்கரமாக இருக்கிறது
என்பதற்கு நிறைய உதாரணங்கள் கிடைக்கின்றன.
கேரளவில் இதன் பாதிப்பு அதிகம்.
கேரள அரசு இதற்கு தடை விதித்துள்ளது.
கர்னாடக அரசும் கூட. ஏறக்குறைய
நாலாயிரம் பேர் இதனால் இறந்திருப்பார்கள்.
குழந்தைகள் மிகக் கொடூரமாகப்
பாதிக்கப் பட்டிருக்கிறார்கள். மார்பகப்
புற்று நோய் வருவதற்கான சாத்தியங்கள்
உண்டு என நிரூபிக்கப் பட்டுள்ளது.
இது நம் தேசமெங்கும் தடை செய்யப்
படாவிட்டால் இது மற்றொரு போபால்
துக்கமாய் மாறக் கூடும் என்பது இன்று
மிகையாய்த் தோன்றலாம். 63 நாடுகள்
இதற்கு தடை விதித்துள்ளன.
இதனை தேசமெங்கும் தடை விதிக்கக்
கோரி நேற்று கேரள முதல்வர் ஒரு அடையாள
உண்ணாவிரதம் இருந்தார். அதில் அரசியல்வாதிகள்
மட்டுமல்லாது கலைஞர்கள்,தொண்டு நிறுவனங்கள்
என அனைத்துத் தரப்பினரும் கலந்து
கொண்டுள்ளார்கள். நேற்று ஜெனிவாவில்
“Stockholm Convention on Persistent
Organic Pollutants" ஆரம்பமாகியுள்ளது.
இதில் ஒரு ஆச்சர்யம் என்னவென்றால்
இதற்கு உலகத் தடை விதிப்பதை
ஒத்தி வைக்கும்படி இந்தியா வேண்டுகோள்
விடுத்துள்ளது. தேசமெங்கும் ஒருமித்தக்
கருத்து ஏற்பட்ட பின்புதான் இது குறித்து
யோசிக்க வேண்டுமென நமது பிரதமர்
கூறியுள்ளார். அதாவது தேசமெங்கும்
இதனால் மிக அதிக அளவில் பாதிக்கப்
பட்டதாக அவர் நம்பும் பட்சத்தில்.
தமிழ்நாட்டில் இது குறித்து செய்தியில்லை.
முதல்வருக்கு சொந்தக் கவலை.
நமக்கும் கூட.

7 கருத்துகள்:

சுசி சொன்னது…

என்ன பயங்கரம் இது :(

ஹுஸைனம்மா சொன்னது…

ம். கேரலாவில் இது குறித்து பெரிய சர்ச்சைகளும், போராட்டங்களும் நட்ந்துவரும் நிலையில், பக்கத்திலிருக்கும் நம் மாநிலத்தில் சத்தமே இல்லை. இங்கிருக்கும் விவசாய சங்கங்கள் இதைப் பற்றி அறிந்திருக்கவில்லையா என்ன?

சுந்தர்ஜி ப்ரகாஷ் சொன்னது…

வயிற்றெரிச்சல் மதுமிதா.

பேயரசு செய்தால் பிணந்தின்னும் சாத்திரங்கள் என்கிற வரிகள் தான் நினைவுக்கு வருகிறது.

maheswari சொன்னது…

sila years mumbu munthiri thopirkku helihopter il endow salphan aditha pin vantha vilaivugal

ரிஷபன் சொன்னது…

என்ன சொல்ல.. நம் தலையெழுத்து என்பதைத் தவிர.

சிசு சொன்னது…

இயற்கை வேளாண் முறையை மறுதலித்ததின் வினை இது.

A.R.ராஜகோபாலன் சொன்னது…

வீரியமான சமூக அக்கறையுள்ள
விதைகளை
வரிகளாய்
வீசி இருக்குறீர்கள்
மனதை பிசையும்
அறிவில் அறையும்
பதிவிற்கு நன்றி