புதன், 11 மே, 2011

புதிய பூ



வடக்கு காஷ்மீரில் இஸ்லாமியர்கள்
பெரும்பான்மையாக வசிக்கும்
உஸ்ஸன் என்ற கிராமத்தில்
நடந்த பஞ்சாயத்துத் தேர்தலில்
முதன் முறையாக ஆஷா ஜீ என்ற
காஷ்மீரீ பண்டிட் வகுப்பைச்
சேர்ந்த பெண்மணி தேர்ந்தெடுக்கப்
பட்டிருக்கிறார். அவரை எதிர்த்து
போட்டியிட்டவர் சர்வா பேகம்
என்னும் இஸ்லாமியர்.
தேர்தல் முடிவு வெளியாகியதும்
இஸ்லாமியர்களும்,இந்துக்களும்
ஒன்று கூடி அவருக்கு வாழ்த்து
தெரிவித்திருக்கிறர்கள்.அவரை
எதிர்த்துப் போட்டியிட்ட
பெண்மணி உட்பட.
மற்ற பிரதேசத்தில்
நடந்திருந்தால் இது ஒரு
சாதாரண விஷயம்.
அரசியல்வாதிகளாலும்,
மதவாதிகளாலும் எரிந்து
கொண்டிருக்கும் காஷ்மீரில்
பூத்திருக்கும் முதல் பூ
இதுவெனச் சொல்லலாம்.
எப்போதும் விடியல்
மெலிதான கீற்று போலத்தான்
ஆரம்பமாகிறது.

6 கருத்துகள்:

ரிஷபன் சொன்னது…

சபாஷ்! இதே போல எல்லா இடங்களிலும் அரசியல்வாதிகளை ஓரங்கட்டி மனிதர்கள் ஜெயிக்கத் துவங்கிவிட்டால் போதும்.. இந்தியா அதன் இயல்பான தன்மைக்கு போய் விடும்.

A.R.ராஜகோபாலன் சொன்னது…

அற்புதமான
சமூக மாற்ற பதிவு
மிக பெரிய ஆல விருட்ஷம் கூட ஒரு
விதையில்ருந்துதான்
விஸ்வரூபம் எடுக்கிறது
நன்றி
நல்லவைகளை
பகிர்ந்ததற்கு

சுசி சொன்னது…

//எப்போதும் விடியல்
மெலிதான கீற்று போலத்தான்
ஆரம்பமாகிறது.//

சரியா சொன்னிங்க மதுமிதா.

குணசேகரன்... சொன்னது…

நல்ல விசயம் நடந்துள்ளது...இந்த பதிவை வெளியிட்டதற்கு என் வாழ்த்துக்கள்.

http://zenguna.blogspot.com

சுந்தர்ஜி ப்ரகாஷ் சொன்னது…

மூன்றாம் பிறை அபூர்வமாய் சிலரின் கண்களில் மட்டுமே தென்படும்.

நீங்கள் பதிவிடும் தகவல்களும் அப்படித்தான்.எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டிருக்கிறோம் என் எண்ணும்போது நீங்கள் தெரிவிக்கும் செய்திகள் ஆச்சர்யப்படுத்துகின்றன.

நீங்கள் சொன்னதுபோல் மொட்டு முகிழ்த்து மகிழ்வித்திருக்கிறது காஷ்மீரில்.

இந்தத் தளத்துக்கு மட்டும் பின் தொடரும் கேட்ஜெட் ஏன் இணைக்கப்படவில்லை? பதிவுகள் வெளியாகும்போது தெரிந்து உடனே வாசிக்கமுடிவதில்லை.

ஹ ர ணி சொன்னது…

நான் இந்த செய்தியைப் படித்தேன். உன்னுடைய பதிவுகள் குறித்து மனசு நிறைகிறது. புதிய பூ-க்கள் நிறைய மலரட்டும் வாசம் வீசட்டும். தோட்டமாக விரியட்டும். வாழ்த்துக்கள்.