வியாழன், 19 ஜனவரி, 2012

KEY


இந்தத் தெலுங்குப் படம் என்னை மிகவும்
வசீகரித்தது. எவ்வித மசாலாக்களும்
இல்லாப் படம்.

ஒன்பது பேர்கள்.
ஒரு வேலைக்கான எழுத்துத் தேர்வு.
கேள்வித்தாளில் வெறுமை.
கேள்வியைக் கண்டுபிடித்து
பதில் எழுத வேண்டும்.
சில விதிகள்.
சில விதிமீறல்கள்.
90 நிமிடங்கள்.

சுவராஸ்ய விரும்பிகள்
தவற விடக் கூடாத்
திரைப் படம்.

10 கருத்துகள்:

ரிஷபன் சொன்னது…

அட! பார்க்கிறேன்..

Madumitha சொன்னது…

அவசியம் பாருங்கள் ரிஷபன்.

செ.சண்முகசுந்தரம் சொன்னது…

அவசியம் பார்க்கிறேன்.

ஹ ர ணி சொன்னது…

அவசியம் பார்க்கிறேன். உன்னுடைய வலைப்பக்கம் எனக்கு எதாவது இருக்கவேண்டும். தொடர்ந்து எழுது. அதையும் அவசியம் எதிர்பார்க்கிறேன்.

ஹேமா சொன்னது…

பாக்கணும்போல இருக்கு உங்க சுருக்கமான விமர்சனம் !

ஹ ர ணி சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
ஹ ர ணி சொன்னது…

அன்புள்ள...

உறரணியின் பணிவான வணக்கங்கள்.

லீப்ஸ்டர் பிளர்க்

இது ஒரு ஜெர்மானிய விருதாகும். இதன் பொருள் மிகவும் பிடித்த - என்பதாகும். இந்த விருதை பெற்றவர்கள் தங்களுக்குப் பிடித்த 7 விஷயங்களைக் குறிப்பிட்டு இவ்விருதைத் தங்களுக்குப் பிடித்த 5 பதிவர்களுக்குப் பகிர்ந்துகொளள்வேண்டும். இது தெரியாமல் நான் இரு தினங்களைக் கடத்திவிட்டேன். எனக்கு விருதைப் பகிர்ந்துகொண்டவர்கள் பதிவுகளில் சென்றுபார்க்கும்போதுதான் இவ்விவரம் எனக்குப் புரிந்தது (முன்ன பின்ன விருது வாங்கியிருந்தால்தானே?) எனவே இதனைத் தாமதமாகப் பகிர்வதற்கு எனக்கு விருது வழஙகியவர்களும் விருதைப் பகிர்ந்து கொள்ள இருப்பவர்களும் பொறுத்துக்கொள்க.

பகிர்வதற்கு முன்னர் இதனை எனக்குப் பகிர்ந்தவர்களுக்கு மீண்டுமொருமுறை எனது அன்பின்நிறைவாய் நன்றிகள்.

நான் இவ்விருதைப் பகிர்ந்துகொள்ளவிருக்கும் பதிவர்களுக்கு இரண்டு அன்பான வேண்டுகோள்கள்.

1, கணிப்பொறியின் தொழில்நுட்பம் எனக்கு இன்னும் நிறைய பிடிபடவேண்டியுள்ளதால் தயவுசெய்து இவ்விருதைத் தாங்களே காப்பி செய்து உங்கள் பதிவுகளில் இட்டுக்கொள்ள வேண்டுகிறேன்.

2, இவ்விருதை அன்புடன் ஏற்கவும் வேண்டுகிறேன்.

நன்றிகள்.


எனக்குப் பிடித்தவை ஏழு.

1. கடைசிவரை நண்பனாய் இருந்து இறந்துபோன
அப்பா.

2. எப்போதும் இடையூறில்லாமல் வாசித்தல்.

3. என்னுடைய படைப்புலகில் தடையில்லாமலும
எப்போதும் உதவவும் காத்திருக்கும் என் மனைவி
என் மகன்.

4. அதிகாலை ரயில் பயணத்தில் எல்லோரும் உறங்க
நான் மட்டும் விழித்திருந்து அனுபவிக்கும் அந்த
தனிமை
.
5. கடவுள் வழிபாடு,

6.. குழந்தைகள்.

7. தமிழ்மொழியின் இலக்கியங்கள்.



பகிர்தல் நேரம்


1, எல்லாவற்றையும் கடந்து இன்றுவரை சிறு முரணும்
இல்லாமல் என்னோடு படைப்புலகில் நட்புகாட்டிவரும்
என் நண்பன்...உடன்பிறவா சகோதரன்...உணர்வான
எழுத்துக்களுக்குச் சொந்தக்காரன்....
நண்பன் மதுமிதா - க்கு..

2. இடைவிடாமல்...துவண்டுவிடாமல்...அப்படி நாங்கள்
துவள்கிற தருணங்களில் உரையாடி,,தன்னுடைய
பன்முகத் திறனால் பளிச்சென்று,,,உறவுகளை
மேன்மையுறச் செய்யும் படைப்பாளி..
என் உடன்பிறவாச் சகோதரன் ரிஷபனுக்கு...

3. பழக ஆரம்பித்தது ஒருசில வருடங்கள் என்றாலும்
மனதிற்குப் பிடித்த அதேசமயம் தெரியாத புதுமை
களைப் பகிர்ந்துகொள்ளும் தோழர் இரா.எட்வின்
அவர்களுக்கு...

4. கவிதைகளில் ஒரு உயிர்ப்பும்...உணர்வும்...சொல்
தேர்வும்,, மனதிற்கு இதமும்....ஆழமும் என
இயங்கிக் கொண்டிருக்கும் சைக்கிள் மிருணாவிற்கு...

5. பணியோய்விற்குப் பின்பும் படைப்புலகில் பல்
வகையான சுவையான பதிவுகளை அள்ளித்தரும்
வைகோ என்றழைக்கப்படும் வை. கோபாலகிருஷ்ணன்
அவர்களுக்கு...


அனைவரும் என் அன்பின் விருதைப் பகிர்ந்துகொள்கிறேன்.

இந்த வாய்ப்பை உருவாக்கியவர்களுக்கு மறுபடியும் நன்றிகள்.

விச்சு சொன்னது…

இன்று வலைச்சரத்தில் இந்த பதிவு அறிமுகம். நேரம் கிடைத்தால் சென்று பாருங்கள்.தமிழ்மணத்தில் வாக்கும் கருத்துகளும் பகிர அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
http://blogintamil.blogspot.in/2012/02/blog-post_18.html

ADHI VENKAT சொன்னது…

சுருக்கமான அருமையான விமர்சனம். வாய்ப்பு கிடைத்தால் பார்க்கிறேன்.

urekawagner சொன்னது…

Harrah's Atlantic City Hotel & Casino - MapYRO
Harrah's Atlantic City Casino & Hotel is the closest casino in the world to 논산 출장샵 Harrah's Resort Atlantic City. 포항 출장마사지 With a stay at Harrah's 충청북도 출장안마 Atlantic City, 서귀포 출장안마 you'll 제주도 출장샵 be a