ஞாயிறு, 13 ஜூன், 2010

எசப்பாட்டு

படுகொலை
செய்யப்பட்ட
மரங்களின்
சமாதிகளின்
மீதேறி
புகை கக்கி
விரையும்
நம்மையும்
மன்னிக்கிறது
இயற்கையின்
பெருங்கருணை.

நதியெனப்படுவது
குடிக்க
குளிக்க
பயிர் செழிக்க
என்பது மருவி
கழிவுநீர்
கலக்க
என்பதாய்..

கடலிலிருந்து
மீனவனை
விரட்ட
ஒரு திட்டம்.
மலையிலிருந்து
பழங்குடியினனை
விரட்ட
ஒரு திட்டம்.
அரசு
ஐந்தாண்டு
திட்டமிடட்டும்.
நாம்
மாறுதலுக்கு
அம்பானியை
பிரதமராகவும்
டாட்டாவை
ஜனாதிபதியாகவும்
ஆக்கி
அழகுபார்க்க
திட்டமிடுவோம்
அரசு சார்பில்.

சிகப்பு
வெள்ளை
பச்சை
கருப்பு
மஞ்சள்
காவி
நீலம்
கட்சிக்
கொடிகள்
தீற்றிக்
கொண்டபின்
எல்லா
வர்ணங்களும்
ஒன்றுதானோ?

12 கருத்துகள்:

பாலா சொன்னது…

அருமையான கருத்துக்கள். நன்றாக இருந்தது.
வாழ்த்துக்கள் நண்பரே...

Ahamed irshad சொன்னது…

சூப்பரான வரிகள்..

தமிழிஷ், தமிழ்மணத்தில் பதிவுகளை இணைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.. மீறினால் என்ன தண்டனையென்று குஷ்பு' முதலமைச்சரானப் பிறகு அறிவிக்கப்படும்...

சுசி சொன்னது…

அருமையா இருக்கு..

ஆதங்கம்.. அநேக மக்களோடது..

ஹேமா சொன்னது…

வர்ணங்கள்
தீட்டிக்
கொண்டபின்
எல்லாக் கொடிகள்
ஒன்றுதானோ!

கவிதை சிந்திக்க வைக்கிறது மது.

சுந்தர்ஜி சொன்னது…

பொட்டில் அறையும் கவிதை மதுமிதா.

Madumitha சொன்னது…

நன்றி
பாலா.
இர்ஷாத்.
சுசி.
ஹேமா.
சுந்தர்ஜி.

கமலேஷ் சொன்னது…

எல்லாமே உண்மைதான்...ரொம்ப நல்லா இருக்கு...

அன்புடன் நான் சொன்னது…

கவிதையில் சமூதாய கோவத்தையும்... அதன் வெப்பத்தையும் வியந்தேன்.
பாராட்டுக்கள்.

Madumitha சொன்னது…

நன்றி
கமலேஷ்
கருணாகரசு

பா.ராஜாராம் சொன்னது…

sparks!

பொடிப் பொடியாக கிடைச்ச வெளிச்சம்.

ரிஷபன் சொன்னது…

சமூக சீற்றம் பிரவகிக்கும் கவிதைகள்.. அனல் தெறிக்கிறது.

ஹ ர ணி சொன்னது…

மதுமிதாவுக்கு...

உன் கவிதை சீற்றங்களை எண்ணிப் பார்க்கிறேன். மனம் சங்கடப்படுகிறது. அலுவலகத்தில் இறந்துபோன ஊழியச் சகோதரனுக்கு என்னுடைய அஞ்சலிகள். எழுதிக்கெர்ண்டேயிருப்போம் எழுத்தில விடிவது நிச்சயம்தான். உறரணி.