சமீபத்தில் விழுப்புரம் அருகே ரயில் தண்டவாளம்
தகர்க்கப்பட்டதன் பின்னணியில் உள்ள அரசியல்
மற்றும் யூகங்களை சற்று ஒதுக்கி விட்டு உடனடியாக
நாம் செய்ய வேண்டியது ஒன்று உள்ளது.
சேலம்-சென்னை எக்மோர் எக்ஸ்பிரஸ் Guard
திரு.ராஜசேகரனுக்கு நம் நன்றிகளையும்
பாராட்டுதல்களையும் தெரிவிப்போம்.
அவரது மதியூக செயல்பாட்டினால் ஆயிரத்துக்கும்
மேற்பட்டோர் உயிர் பிழைத்தனர்.
தவறுகளையே சுட்டிக் காட்டும் ஊடகங்கள்
தவறுகளைத் தடுப்பவர்களை முன்னிலைப்
படுத்த வேண்டும்.
************************************
மூன்று நாட்களுக்கு முன் எங்கள் அலுவலகத்தில்
தற்காலிக ஊழியராக வேலை பார்த்த ரஜினி
என்ற இளைஞன் இரு சக்கர வாகன விபத்தில்
உயிரிழந்தார். எப்போதும் சிரித்த முகத்துடன்
எதிர்படும் அந்த இளைஞரின் வண்ன மயமானக்
கனவுகள் அனைத்தும் ஒற்றை நொடியில்
முரட்டு சக்கரங்களுக்கிடையே சிதைந்து போயின.
யோசித்து பார்க்கும் போது நகரத்துக்கு வெளியேதான்
நிறைய இரு சக்கர வாகன விபத்துகள் நடக்கின்றன.
கையில் வண்டி இருக்கு. பஸ் பிடித்துப் போக
வேண்டிய தேவையில்லை என்ற பொது புத்தியைத்
தள்ளி வைத்து விட்டு நகரத்துக்குள்ளாக மட்டுமே
ஓட்டினால் ஓரளவுக்கு விபத்துக்களைத் தவிர்க்கலாம்.
*****************************************************
திரு.கலாநிதி மாறன் ஸ்பைஸ் ஜெட் என்னும்
விமானக் கம்பெனியை வாங்கியுள்ளதாக தகவல்
வந்துள்ளது. ஆயிரத்து இரு நூற்று இருபது கோடி
ரூபாய் கொடுத்துள்ளதாகவும். சன் டிவி சீரியல்களைப்
பார்த்து நம் மக்கள் சிந்திய கண்ணிர்த்துளிகள்
பெரு வெள்ளமாய் பெருகியுள்ளதற்கு இதைவிட
பெரிய சாட்சி வேண்டுமா என்ன?
******************************************************
அயல் நாட்டில் வசிக்கும் இந்தியர்கள் இந்தியத்
தேர்தலில் ஓட்டு அளிப்பதற்கான உரிமை
அளிப்பதற்கான முயற்சி இறுதி வடிவத்தை
அடைந்துள்ளது. ஓட்டு போடாமல் சித்தாந்தம் பேசும்
உள்நாட்டு இந்தியர்கள் முகத்தில் அயல் தேச இந்தியர்கள்
கரி பூசுவார்களா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
12 கருத்துகள்:
திரு. ராஜசேகரனுக்கு நன்றிகள்.
//சன் டிவி சீரியல்களைப்
பார்த்து நம் மக்கள் சிந்திய கண்ணிர்த்துளிகள்
பெரு வெள்ளமாய் பெருகியுள்ளதற்கு இதைவிட
பெரிய சாட்சி வேண்டுமா என்ன?//
நகைச்சுவையை மீறிய கோபம்.
கதம்பம் நல்லா இருக்கு.
வெகு நல்ல தகவல்கள் தோழி...வாழ்த்துக்கள்..தொடருங்கள்..
நன்றி சுசி.
நன்றி கமலேஷ்.. தோழி அல்ல தோழர்.
நல்ல கதம்பம் மதுமிதா. அதிலும் ஸ்பைஸ் ஜெட் மேட்டர் A 1 ...
நன்றி தங்கமணி.
தஞ்சாவூர்க் கதம்பம் அதற்கேயான மணத்துடன். உபயோகமாயிருந்தது மதுமிதா.
கதம்பம் வெட்டி விஷயங்கள் எதுவுமில்லாம ரொம்ப நல்லா இருக்கு. உங்களின் சமூக அக்கறையை நினைத்து மகிழ்கிறேன் மது.
எல்லாமே யோசிக்க வைப்பவை; வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான ஓட்டுரிமை மகிழவைக்கிறது. அதே போல இந்தியாவிற்குள்ளேயே ஊர்விட்டு ஊர் போயிருப்பவர்களும் ஓட்டு போட வழிவகை செய்ய வேண்டும்.
அயல் நாட்டில் வசிக்கும் இந்தியர்கள் இந்தியத்
தேர்தலில் ஓட்டு அளிப்பதற்கான உரிமை
அளிப்பதற்கான முயற்சி இறுதி வடிவத்தை
அடைந்துள்ளது.//
டப்பு கிடைக்குமா....!?
//
டப்பு கிடைக்குமா....!?//
ரிப்பீட்டே....
ஓட்டு போடாமல் சித்தாந்தம் பேசும்
உள்நாட்டு இந்தியர்கள் முகத்தில் அயல் தேச இந்தியர்கள்
கரி பூசுவார்களா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
நையாண்டி பிடித்திருந்தது.
ஓட்டு போடாமல் சித்தாந்தம் பேசும்
உள்நாட்டு இந்தியர்கள் முகத்தில் அயல் தேச இந்தியர்கள்
கரி பூசுவார்களா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
நையாண்டி பிடித்திருந்தது.
கருத்துரையிடுக