திங்கள், 21 ஜூன், 2010

மேலும் சில

வெள்ளமெனப்
பெருகும்
குறுஞ்
செய்திகளில்
தேடிக்
கொண்டிருக்கிறேன்
நீ
சொல்லாமல்
விட்ட
ஒரு
செய்தியை.

*************************

கைமறதியாய்
வைத்த
மூக்குக்
கண்ணாடியைத்
தேடும்
முதியவரைப்
போல்
உள்ளுக்குள்
அலைகிறது
ஒரு
கவிதை.

************************

பாலத்தினடியில்
தவித்து
நிற்கும்
நதியின்
விசும்பலில்
உறைகிறது
ஒரு
வரலாற்றுத்
துக்கம்.

************************

சாணை
தீட்டி
தீட்டி
நீ
பிரயோகித்த
வார்த்தைதகளால்
தாக்குண்டு
வீழ்கிறது
நமக்கான
சம்பாஷணை.

8 கருத்துகள்:

சுந்தர்ஜி சொன்னது…

ஒவ்வொன்றிலும் தெறிக்கிறது உங்கள் எழுத்தின் அனுபவமும் மொழியின் வசமும். அருமை மது.

ஹ ர ணி சொன்னது…

மதுமிதா...

கை மறதியாய் வைத்துவிட்ட விஷயங்கள் பல. உள்ளுக்குள் அலைந்து கொண்டுதானிருக்கின்றன ஒவ்வொருத்தருக்குள்ளும்..கவிதை என்னவெல்லாம் செய்கிறது. எப்படியெல்லாம் படுத்துகிறது.. அருமையான பளிச் கவிதைகள்..
உறரணி.

M. Azard (ADrockz) சொன்னது…

//வெள்ளமெனப்
பெருகும்
குறுஞ்
செய்திகளில்
தேடிக்
கொண்டிருக்கிறேன்
நீ
சொல்லாமல்
விட்ட
ஒரு
செய்தியை.//
அருமை

Mahi சொன்னது…

இரண்டாவது கவிதை அருமையாக இருக்குங்க!

ஹேமா சொன்னது…

இரண்டாவதும் மூன்றாவதும் உண்மையில் உணர்ந்தவை.
எல்லாமே நல்லாயிருக்கு மது.

Bala சொன்னது…

மிக அருமையான கவிதைகள். அனுபவம் பேசுகிறதா?
வாழ்த்துக்கள்.

சுசி சொன்னது…

அருமையா இருக்கு மதுமிதா..

வார்த்தைகளின் கோர்வை பிரமாதம்.

ரிஷபன் சொன்னது…

ஒவ்வொன்றிலும் வித்தியாசமான பார்வைகள்.. நைஸ்.