ஞாயிறு, 18 ஜூலை, 2010

ஒன்று , இரண்டு , மூன்று


குல்மொஹர்
உதிர்க்கும்
தீத்துளிகளில்
குளிர்காய்ந்து
கொண்டிருக்கிறது
தகிக்கும்
என் காதல்.


வேட்டையாடிய
மிருகத்தின்
பக்கத்தில்
நின்று
புகைப்படம்
எடுத்துக்
கொள்பவனை
நினைவூட்டுகிறாய்
என்று
சொல்லிப் போனான்
வென்ற காதலை
மணமுடித்த
அன்று.சுவரிலிட்ட
குழந்தையின்
கிறுக்கல்களில்
தேடினால்
கிடைக்கக் கூடும்
கடவுளின்
கையொப்பம்.

11 கருத்துகள்:

பத்மா சொன்னது…

மூன்றும் அழகு ..

சுந்தர்ஜி சொன்னது…

உங்க மொழி மயக்குது மதுமிதா.ரெண்டும் மூணும் எனக்கு ரொம்ப ரெருக்கமா இருக்கு.

r.v.saravanan சொன்னது…

முத்துக்கள் மூன்று

ஹேமா சொன்னது…

ஒன்றைவிட ஒன்று அருமையாயிருக்கு மது.

இரண்டாவதும் மூன்றாவதும் கற்பனை அழகுதான்.

கமலேஷ் சொன்னது…

மூன்றுமே அருமையாக இருக்கிறது மது சார்.
மூன்றாவது ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு..

thenammailakshmanan சொன்னது…

கையொப்பமும் வேட்டை மானும் அருமை மது..

சே.குமார் சொன்னது…

கவிதை மிகவும் அருமை. அதுவும் கடைசி கவிதை அருமையிலும் அருமை.


எனது தள முகவரி

http://www.vayalaan.blogspot.com

velkannan சொன்னது…

மூன்றுமே ஒன்றைவிட ஒன்று வலிமையாகவும் ஆழமாகவும் பேசி செல்கின்றன பல நுட்பங்களை.அருமை.
(follower ஏன் இல்லை மதுமிதா .. ?)

ரிஷபன் சொன்னது…

இரண்டாவது கவிதை.. மதுமிதா.. அய்யோ.. என்ன சொல்றதுன்னே புரியல.. தரமான ஒரு சிறுகதை படித்த சுரீர்.

ஆதவா சொன்னது…

மூன்றாவது கவிதை அருமை. குழந்தைகளின் கிறுக்கலை வேறு கோணத்தில் கண்ட சிறப்பு... வாழ்த்துகள்

Harani சொன்னது…

அன்புள்ள மதுமிதா...

மறுபடியும் என் ஓடல் தொடங்கிவிட்டது. இடையில் கிடைத்த இளைப்பாறும் நேரத்தில் உன் கவிதைகள் இதம். கடவுளின் கையொப்பம்தான். உறரணி.