வெள்ளி, 23 ஜூலை, 2010

ஒரு திரைக்கதையாசிரியனைக் குறித்துலோகி (நினைவுகள்- மதிப்பீடுகள்)

மலையாளத் திரையுலகத்தின் மிக வசீகரமான திரைக்கதையாசிரியர்களில் ஒருவரான
லோகி என்கிற ஏ.கே.லோகிததாஸ் குறித்து ஜெயமோகன் எழுதியுள்ளார்.
படிக்கும் போதெ மலயாளத் திரையுலகம் குறித்து பொறாமை எழுவதைத் தடுக்க
முடியவில்லை.கதை,திரைக்கதையாசிரியருக்கு இயக்குனருக்கு நிகரான அந்தஸ்து.
தனியாவர்த்தனம்,கிரீடம்,ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா,பரதம்,அமரம்,
தூவல் கொட்டரம் எனச் சொல்லிக் கொண்டெ போகலாம். அத்தனைக்கும் கதை,
திரைக் கதை லோகியே. கிட்டதட்ட அறுபதுக்கு மேற்பட்ட பிரபலமான படங்களுக்கு
கதையால் உயிர் கொடுத்தவர். மிகச் சிறந்த படங்களையும் இயக்கியுள்ளார்.
இந்த நேரத்தில் நம் தமிழ் படங்கள் ஞாபகத்திற்கு வருவதைத் தடுக்க முடியவில்லை.
இலக்கியவாதிகளை அங்கீகரிக்காத உலகம் அது. மிகச் சொற்பமான படங்களே
நாவல்களைத் தழுவி வந்துள்ளது. ஜெயகாந்தன்,மகேந்திரன் முக்கியமானவர்கள்.
மற்றபடி இங்கே கதை என்பது ஒரு கும்பலால் உருவாக்கப் படுகிறது இயக்குனருக்காக.
மலிவான விலையில் கிடைக்கும் டிவிடிக்கள் புண்ணியத்திலும் கதைகள்
உருவாக்கப் படுகின்றன. எஸ்.ராமகிருஷ்ணன்,ஜெயமோகன் கொஞ்சம்
முயற்சிக்கிறார்கள். நம்மிடம் மிகச் சிறந்த கதைகளும்,கதையாசிரியர்களுமுண்டு.
அவர்களைப் பயன் படுத்திக் கொண்டால் நடிகர்கள் பின்னால் போய் தலையில்
துண்டு போட்டுக் கொள்ள அவசியம் ஏற்படாது. ஒளிப்பதிவாளர்கள்,இசையமைப்பாளர்கள்,
பாடலாசிரியர்கள் இவர்களை விட கதையாசிரியர்கள் சிறந்த படத்துக்கான ஆணிவேராய்
இருக்கக் கூடியவர்கள். இலக்கியவாதிகளின்றி இனி திரைஉலகம் இல்லை
என்ற நிலை வரவேண்டும்.
வரும்.
காத்திருப்போம்.

6 கருத்துகள்:

Karthick Chidambaram சொன்னது…

//இலக்கியவாதிகளின்றி இனி திரைஉலகம் இல்லை
என்ற நிலை வரவேண்டும்.//

In Tamil .... ?
I like your desire.

ரிஷபன் சொன்னது…

நிஜமான ஆதங்கம்.. கோடிகளில் செலவிட்டு டப்பாக்களில் சுருளும் படங்கள்.. எவ்வித ரசனைத் தேர்வுக்கும் இடமற்ற நிலை..

ஆறுமுகம் முருகேசன் சொன்னது…

ம், நிஜாமான ஆதங்கம்...

ஹேமா சொன்னது…

திரையுலகம் இன்று வியாபார உலகம்

sweatha சொன்னது…

உங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்களேன், அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு
ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு வகையில் அதிகம் பார்க்கப்பட்ட பதிவுக்கு jeejix பணம் குடுக்குதாம்.
ஆயிரக்கணக்கா என் ஆர் ஐ இருக்காங்கப்பா அந்த சைட்ல.
நீங்க அந்த சைட்ல பதிவு செய்தீங்கன்னா மறக்காம என்னோட ஈமெயில் (sweathasanjana அட் ஜிமெயில் )
ஐடிய அறிமுகபடுதினவங்க அப்படின்னு அவங்க ஈமெயில் ஐடிக்கு அனுப்புங்க. புண்ணியமா போகட்டும்
:)

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

திரைக்கதை ஆசிரியர்களை இப்போ யார் மதிக்கறாங்க.நல்ல பதிவு