திங்கள், 23 ஆகஸ்ட், 2010

1 சந்தோஷமும் 3 எரிச்சல்களும்

வேலைக்குச் செல்லாத குடும்பத் தலைவிகளுக்கு ஏதேனும் விபத்து நேரிட்டால்
அவர்கள் வருமானம் ஈட்டாதப் பிரிவைச் சார்ந்தவர் என்ற வகையில் சொற்பத்
தொகையே இழப்பீடாக வழங்கப் படும். இதில் மிகவும் வேதனைக்குரிய விஷயம்
வருமனம் ஈட்டாதவர்கள் பிரிவில் வேலைக்குப் போகாத குடும்பத் தலைவிகள்
அதன் பின் வருபவர்கள் பிச்சைக்காரர்கள் மற்றும் விபச்சாரம் செய்பவர்கள்.
ஆனால் சமீபத்திய தீர்ப்பு ஒன்றில் இதனை ஏற்றுக் கொள்ள மறுத்து குடும்பத்
தலைவிகளின் பங்கு குறித்து சிலாகித்துப் பேசி பெரும் தொகையை இழப்பீடாக
தரச் சொல்லியிருக்கிறார்கள். இது மிகவும் பாரட்டப்பட வேண்டிய விஷயம்
மட்டுமல்ல. இனி வரும் தீர்ப்புகளுக்கு இது மிகவும் உதவிகரமாயிருக்கும்.

*******************************************

ஸ்டெர்லைட் நிறுவனத்தின் பொறுப்பாளருக்கு அரசின் வழிகாட்டலை மீறி
300 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியதற்கான வழக்கில் அவருக்கு ஜாமீன்
தொகை ரூபாய் 200 கோடியாக நிர்ணயிக்கப்பட்டது. இந்த இடத்தில் நம்
நினைவுக்கு வருவது போபால் பேரழிவிறகு காரணமானவர்களுக்கு
நிர்ணயிக்கப்பட்ட ஜாமீன் தொகை...
சில ஆயிரங்கள் மட்டுமே....!

*******************************************

மற்றொரு வழக்கில் வரதட்சணை கேட்பது சட்டப்படிக் குற்றமில்லை.
வரதட்சணைக் கேட்டு பெண்ணை உடல்ரீதியாகத் துன்புறுத்தினால்தான்
குற்றமென தீர்ப்பு வந்துள்ளது. அனைத்து மகளிர் இயக்கங்களும் இதனை
எதிர்த்துள்ளன.

*******************************************

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஊதிய உயர்வு ரூபாய் பதினாறாயிரத்திலிருந்து
எண்பதாயிரம்.
இந்தியாவில் உள்ள மிகப் பிரபலமான காகித தயாரிப்புக் கம்பெனி
இருபது மூங்கில் கழிகள் கொண்ட ஒரு கட்டுக்கு நிர்ணயித்துள்ள விலை
ரூபாய் ஒன்று. மிகப்பெரிய போராட்டத்திற்குப் பிறகே இருபது பைசாவிலிருந்து
ஒரு ரூபாயாக ஏறியிருக்கிறது. இந்த மூங்கில் கழிகளை, வன அதிகாரிகளிடமிருந்து
மீண்டு குறந்த பட்சம் பத்து கிலோ மீட்டர் தலையில் சுமந்து, மலைப்பாதையில் இறங்கி வந்து இந்த ரூபாயைப் பெறுகிறார்கள் மலைவாழ் மக்கள்.

**************************************************

11 கருத்துகள்:

சுசி சொன்னது…

மலைவாழ் மக்கள் :((((

எஸ்.கே சொன்னது…

ஒரு பக்கம் குடும்ப தலைவிக்கு நல்லத் பண்ணுறாங்க, ஒரு பக்கம் வரதட்சனை வாங்கறது குற்றமில்லங்கிறாங்க!

பவள சங்கரி சொன்னது…

குடும்பத் தலைவிகள் எப்பொழுதும் இப்படித்தான் மரியாதைக் குறைவாகவே நடத்தப் படுகிறார்கள். சரியாக எடுத்துக் காட்டியுள்ளீர்கள். நன்றி.

ராசராசசோழன் சொன்னது…

மதுமிதா என்றொருவர் இருக்கிறார்...இனி விளையாட்டாக எதையும் எடுத்து கொள்ளாதீர்கள்....வாழ்த்துக்கள் சகோதரி....

ராசராசசோழன் சொன்னது…

யாருடைய பெயர்...சகோதரரே

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) சொன்னது…

ச.. அநியாயம்... ஒரு ரூபாயா?

நல்ல பகிர்வு..

Ahamed irshad சொன்னது…

Thanks for sharing..

rvelkannan சொன்னது…

நானும் ஒன்றில் மகிழ்ச்சியுற்று மூன்றில் எரிச்சலுற்றேன். பகிர்வில் வியப்படைந்தேன் மதுமிதா

'பரிவை' சே.குமார் சொன்னது…

நல்ல பகிர்வு..

கமலேஷ் சொன்னது…

வாழுமிடம் சபிக்கப்பட்ட பூமி. செய்வதற்கொன்றும்மில்லை மது சார்.

எல்லாருக்கும்
பிடித்தவனாய்
இருக்கும்
முயற்சியில்
என்னையே
பிடிக்காமல்
போனது.
*****************
அவிழ்த்து
வைத்த
ஊஞ்சல்
ஆடிக்
கொண்டிருக்கிறது
மனசுக்குள்.
*****************
இந்த பழைய வரிகள் மிக மிக பிடித்தது மது சார். அருமையா இருக்கு..

ரிஷபன் சொன்னது…

எத்தகைய முரண்களுக்குள் வாழ்க்கையின் தடங்கள்..