செவ்வாய், 10 ஆகஸ்ட், 2010

சில கேள்விகளும் சில புரிதல்களும்

தோழியர் கயல் தொடர்பதிவிற்கு அழைத்துள்ளார்கள்.
மிக்க நன்றி.
பதிவுலகை பொறுத்த வரை நான் ஒரு தவழும்
குழந்தை. எனினும் .....

1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

மதுமிதா.
2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

இல்லை. நான் சந்தானகிருஷ்ணன். பத்திரிக்கைகளுக்கு எழுத ஆரம்பித்த போது அந்தப் பெயரில் இருந்த வசீகரத்திற்காக அதை புனைந்து கொண்டேன்.

3) நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி....

அது ஒரு சாதாரண விஷயம்.

4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

எழுதுபவது மட்டும்தான் பிரதான செயல்.

5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

நூறு சதவீதம் கற்பனை என்ற ஒன்று உண்டா?.பின்னூட்டங்கள்
தான் பின் விளைவுகள்.

6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

எழுதுவதில் உள்ள சுவாரசியத்திற்காக மட்டுமே.

7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

இரண்டு. இரண்டும் தமிழ்.
மற்றொன்று :
http;//thejushivan.blogspot.com

8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

கோபம், பொறாமை என்பவையெல்லாம் கொஞ்சம் தீவிரமான உணர்ச்சிகள். நல்ல எழுத்தைப் படிக்கும் போது ஏற்படுவது சந்தோஷம் மட்டுமே.

9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..

நண்பர் சுந்தர்ஜி. ஆத்மார்த்தமான எழுத்துக்குச் சொந்தக்காரர்.
சுந்தர்ஜி என்ற இதழை நடத்தி வருகிறார்.
அவர் அவசியம் படிக்கப் பட வேண்டியவர்.
அவரைப் படிக்க :
http://sundarjiprakash.blogspot.com

10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...

என்னைப் பற்றி என் எழுத்துக்கள் சொல்லக் கூடும்.

இந்த பதிவைத் தொடர இவர்களை அழைக்கிறேன்

ரிஷபன்
ஹரணி
பாலா
பத்மா

6 கருத்துகள்:

சுசி சொன்னது…

நல்ல பதில்கள் மதுமிதா.

கமலேஷ் சொன்னது…

ரொம்ப நல்ல பதில் மது சார்,,

Bala சொன்னது…

நண்பரே உங்கள் தொடர் பதிவு அழைப்புக்கு நன்றி. நான் முன்னமே பார்த்துவிட்டேன். ஆனால் பாலா என்பது பொதுபடையான பெயர் என்பதால் என்னைத்தான் அழைத்தீர்களா என்று குழம்பி விட்டேன்.

கயல் சொன்னது…

நன்றி மதுமிதா! யதார்த்தமான பதில்கள்.

பத்மா சொன்னது…

ayyo thodar pathivaa ..enakku varave varaathe

r.v.saravanan சொன்னது…

நல்ல பதில்கள் மது வாழ்த்துக்கள்