ஞாயிறு, 12 செப்டம்பர், 2010

பதிவரசியல் : ஒரு ஆணாக அவமானப்படுகிறேன்

மேலே உள்ள தலைப்பில் ஆ.மாதவராஜ் சார் தன்
பிளாக்கில் எழுதியுள்ளார். படிக்கும் போதே மனசுக்கு
கஷ்டமாக இருக்கிறது. பெண்கள் பொது தளத்தில்
எழுத வரும்போது ஆணகள் எப்படி
எதிர்வினையாற்றுகிறார்கள் என்பதற்கு மற்றொரு
உதாரணம். முந்தைய உதாரணம் மறைவதற்குள்
அடுத்தது. விதி விலக்குகளை விலக்கி விட்டு
பேசுவோம்.நவீனமயம் என்பது நம் சிந்தனையில்
வரவேண்டும். அது நாம் உபயோகிக்கும்
பொருட்களில் மட்டுமே இருக்கிறது. வினவு தளத்தில்
அந்த சகோதரி இரு ஆண் பதிவர்களால் தனக்கு
ஏற்பட்ட மன நெருக்கடிகளைப் பற்றி எழுதியுள்ளார்.
ஆண்களின் பிரச்சினைதான் என்ன?
ஒரு கால் இருபத்தோறாம் நூற்றாண்டிலும்,
மறு கால் பத்தொன்பதாம்
நூற்றாண்டிலும் ஊன்றி நிற்கிறார்கள்.
பெண்கள் நினத்தால் ஆண்களை விட
நிறைய விஷயங்களை எழுத முடியும்.
எழுத மறுக்கிறார்கள் என்பதற்கான
காரணம் இப்போது புரிகிறது. ஆணாதிக்க
முட்பாதையைக் கடக்க வேண்டிய சூழல் இங்கு
நிலவுகிறது. எல்லா ஆண்களும் தங்களின்
சிந்தனை செல்லும் தடத்தை மாற்றிக் கொண்டால்
பெண்களின் பங்களிப்பு நமக்கு நிறைய கிடைக்கும்.

செய்வோமா?

நானும் மாதவராஜ் சாரை வழிமொழிகிறேன்.

7 கருத்துகள்:

பவள சங்கரி சொன்னது…

ஒரு கால் இருபத்தோறாம் நூற்றாண்டிலும்,
மறு கால் பத்தொன்பதாம்
நூற்றாண்டிலும் ஊன்றி நிற்கிறார்கள்.
பெண்கள் நினத்தால் ஆண்களை விட
நிறைய விஷயங்களை எழுத முடியும்.
எழுத மறுக்கிறார்கள் என்பதற்கான
காரணம் இப்போது புரிகிறது. ஆணாதிக்க
முட்பாதையைக் கடக்க வேண்டிய சூழல் இங்கு
நிலவுகிறது. எல்லா ஆண்களும் தங்களின்
சிந்தனை செல்லும் தடத்தை மாற்றிக் கொண்டால்
பெண்களின் பங்களிப்பு நமக்கு நிறைய கிடைக்கும்.
அருமை.....அருமையாகச் சொன்னீர்கள். அவர்களுக்கு கொஞ்சம் தன்னம்பிக்கை குறைவதால், பயம் ஏற்படுகிறதோ என்னவோ........

ஹேமா சொன்னது…

பெருமூச்சு மட்டுமே மிஞ்சி நிற்கிறது.ஒன்றுமே சொல்ல விருப்பமில்லை மது !

தினேஷ்குமார் சொன்னது…

சாரிங்க நான் உங்கள் பகிர்வுக்கு புதிது உங்களுக்கு மட்டுமல்ல பதிவுலகிற்கே புதியவன்
பதிவுலகிலும் ஆணாதிக்கம் எனும்
சொல் கேட்கும் போது.........

சுந்தர்ஜி சொன்னது…

பேசப்பட வேண்டிய விஷயம் இது மதுமிதா.

நான் கவனித்திருக்கிறேன்.

சில பதிவுகளில் இடுகைக்குக் கொடுக்கப்படும் பின்னூட்டங்கள் இதை நிரூபிக்கின்றன.

இதை விடவும் வேடிக்கை பல ஆண்களே தங்கள் வயதைத் தெரிவிப்பதில்லை.

என்ன பேசுகிறோம்-எழுதுகிறோம் என்பதில் பொறுப்பு இருப்பதில்லை. பல தளங்களுக்கு என்னால் போய் நிம்மதியாகத் திரும்ப முடிவதில்லை என்பதால் அந்தத் தளங்களுக்குச் செல்வதையே தவிர்க்கிறேன்.

நிறைய எழுதுபவர்களுக்கும் இந்த முதிர்ச்சி இல்லாது இருக்கக் காரணம் வாழ்க்கை குறித்த முதிர்ச்சியின்மைதான்.

ஆண்/பெண் என்ற பால் பாகுபாடு எழுத்தில் வருகிறது என்பது வேதனைக்குரியது.

பல தளங்கள் சட்டாம்பிள்ளை போல் எடுத்ததெற்கெல்லாம் உடனடியாகப் பொங்கியெழுவதும் வேடிக்கைதான்.

இன்னும் ஜாதிய உணர்வு-நிற பேதம் எல்லாமும் இருப்பதையும் பார்க்க முடிகிறது.

நீங்கள் சொன்னதுபோல் எந்த நாட்களில் நாம் உலவுகிறோம் என்ற சந்தேகம் அடிக்கடி வருவது தவிக்கமுடியாது போகிறது.

ரிஷபன் சொன்னது…

சுந்தர்ஜி சொன்னதை அப்படியே வழிமொழிகிறேன். ஆனாலும் இதையும் தாண்டி பல நல்ல பதிவர்கள் இருப்பது மனசுக்கு ஆறுதலான விஷயம்.

கயல் சொன்னது…

எழுத எத்தனையோ இருக்குங்க. ஆனா யாரோ யார் மேலயோ தன் ஆதிக்கத்த செலுத்த முனையுறப்பொ தான் பிரச்சனை தலை தூக்குது. நான் மேதாவிங்கிற அந்த மனோவியாதியை கொஞ்சம் சரிபண்ணினா ஆணாதிக்கமோ பெண்ணாதிக்கமோ இருக்காதுங்க! நானும் மாதவ் ஜீ யை வழிமொழிகிறேன், ஆண்பெண் என்கிற பாகுபாடில்லாமல் ஆதிக்க மனப்பான்மைக்கு எதிரான எதிர்ப்பு தேவையென்பதால்...

profit500 சொன்னது…

ஒரு கால் இருபத்தோறாம் நூற்றாண்டிலும்,
மறு கால் பத்தொன்பதாம்
நூற்றாண்டிலும் ஊன்றி நிற்கிறார்கள்.