புதன், 24 நவம்பர், 2010

மரணத்திற்கு முன்பான

விதிகளுக்கு
உட்பட்டு
வாழ்வதெனும்
விதியைக்
கடைபிடித்தால்
சில
விதிவிலக்குகள்
சாத்தியம்.
பழகிய பாதையில்
நடந்தால்
சேருமிடம்
உத்திரவாதம்.
பழையன
பழகினால்
காயங்கள்
தவிர்க்கலாம்.
மரணத்திற்கு
முன்பான
நொடியில்
சுழித்து
மேலெழும்பும்
கேள்விக்கு
பதிலற்று
மரித்துப்
போகலாம்.

3 கருத்துகள்:

சுசி சொன்னது…

நல்லா இருக்கு மதுமிதா.

ரிஷபன் சொன்னது…

நல்லா இருக்கு..

சுந்தர்ஜி சொன்னது…

பழகிய பாதையில் விதியைக் கடைப்பிடித்து பழையன பழகிக் கடக்கையில் மரணத்துக்கு முன்பான வாழ்விலேயே மரித்திருப்போம் மதுமிதா.