ஞாயிறு, 5 ஜூன், 2011

கதம்பம்

இன்று உலக சுற்றுச்சூழல் தினம்.
ஒரு செடி நடுவது.
ஒரு செடிக்கு நீர் ஊற்றுவது.
பெட்ரோல் வாகனத்தைத்
தவிர்ப்பது.
இதில் ஏதாவது
ஒன்றைச் செய்தல்
உகந்தது.

************************

பெற்றோர்கள்.
ஆசிரியர்கள்.
பள்ளிகள்.
மேலேச் சொல்லப் பட்ட
அனைவரும்
எதிர்ப்பதாலேயே
ஒரு விஷயம்
புரிகிறது.
சமச்சீர் கல்வி
ஒரு நல்ல
முயற்சியென.
மெக்காலேயின்
பாதிப்பிலிருந்து
நம் குழந்தைகளாவது
விடுபடட்டும்.

************************

மேற்கிந்தியத்தீவினை
T20 யில்
வென்றிருக்கிறோம்
பெரிய தலைகள்
ஏதுமின்றி.
ரஹ்மான் வந்தபின்
monopoly
தகர்ந்த மாதிரி
IPL
வந்தபின்
நிறைய
புது முகங்கள்.
கலக்குங்க
Rain ஆ.

************************

சமீபத்தில் தான்
திபெத்திய
படமான
சம்சாரா
பார்க்க முடிந்தது.
அதில் கதாநாயகி
கேட்கும்
கேள்விகள்
மனசுள் சுழன்று
கொண்டிருக்கின்றன.
“ சித்தார்த்தன்
தன் மனைவியையும்
மகனையும்
பிரிந்த பின்
புத்தனாக
அறியப்பட்டான்.
வரலாற்றின்
பக்கத்தில்
எங்காவது
யசோதரையும்,ராகுலும்
நினைவுகூரப்படுகிறார்களா?
யசோதரை
சித்தார்த்தனையும்
ராகுலையும்
ஞானத்தேடலுக்காய்ப்
பிரிந்திருந்தால்
அவள்
எவ்விதம்
ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பாள்?”
பதில்
சொல்ல முடியாதக்
கேள்விகள்.

*************************

திருநெல்வேலியைச்
சேர்ந்த ஆறாம் வகுப்பு
மாணவி விசாலினி
சிஸ்கோ,மைக்ரோசஃப்ட்
நிறுவனங்கள்
நடத்தும் ஆன்லைன்
தேர்வுகளில் ஒன்றான
CCNA தேர்வினை
எழுதி வெற்றி
பெற்றிருக்கிறார்.
இதில் வெற்றி பெற
பிடெக்,எம்சிஏ
படித்தவர்களே
திணறுவார்கள்
என்பதே செய்தி.
இதுபோல
இந்தத் தேர்வினை
இதற்கு முன்பு
பாகிஸ்தானைச் சேர்ந்த
12 வயது சிறுவன்
எழுதி வெற்றி
பெற்றிருக்கிறான்.
அவனை அங்கே
Proud of Pakistan
என்று
கொண்டாடினார்கள்.
இங்கே
விசாலினியை
உயர்கல்வி
பயிலச்
சேர்த்துக் கொள்ள
நம் சட்டங்கள்
மறுக்கின்றன.

8 கருத்துகள்:

ரிஷபன் சொன்னது…

ஒரு புத்தன் கிடைக்க, சில பிரிவுகள் அவசியமாகிறது.
யசோதரை பிரிந்திருந்தாலும் அதே போலத்தான். கேள்வி என்னவென்றால் யார் பிரிந்தாலும் சரி.. முடிவில் புத்தனோ.. சித்தனோ கிடைக்கிறார்களா.. என்பதே. எத்தனை பேர் சேர்ந்து இருந்து தினசரி வாழ்க்கையை நரகமாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.. அந்தக் கதைகளும் இருக்கத்தானே செய்கிறது.

Madumitha சொன்னது…

நன்றி ரிஷபன்.
ஒரு கோணத்தில்
நீங்கள்
சொல்வது சரி.
ஆனால்
யசோதரையின்
கோபத்தில்
நியாயம்
இருக்கத்தான்
செய்கிறது.

ஹ ர ணி சொன்னது…

பயனுள்ள பதிவு மதுமிதா.
செடி நடவும் நீர்விடவும்கூடவேண்டாம். ஏற்கெனவே நட்டதையும் நீர்விட்டதையும் கெடுக்காதிருந்தாலே போதும். சமச்சீர் கல்வி சரியானதுதான் சரியான தளத்தில் அதை அணுக அரசுக்குச் சொல்லவேண்டும். நாம் அறிவுத்திறனை வியந்து விளம்பரப்படுத்திக்கொள்வோம் ஆனால் அதை அங்கீகரிப்பதில் அடம்பிடிப்போம் மோசமான மிருகத்தைப்போல.

ad சொன்னது…

"அவனை அங்கே
Proud of Pakistan
என்று
கொண்டாடினார்கள்.
இங்கே
விசாலினியை
உயர்கல்வி
பயிலச்
சேர்த்துக் கொள்ள
நம் சட்டங்கள்
மறுக்கின்றன."

-சிந்திக்கவேண்டிய விடயம்.சிந்திக்கவேண்டியவர்கள் சிந்திப்பார்களா?

நிலாமகள் சொன்னது…

வரலாற்றின்
பக்கத்தில்
எங்காவது
யசோதரையும்,ராகுலும்
நினைவுகூரப்படுகிறார்களா?
யசோதரை
சித்தார்த்தனையும்
ராகுலையும்
ஞானத்தேடலுக்காய்ப்
பிரிந்திருந்தால்
அவள்
எவ்விதம்
ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பாள்?”
"சுளீர்" என‌ சாட்டைய‌டி. ப‌தில் சொல்ல‌ முடியாம‌ல் ச‌மூக‌ இருப்பு நாவைக் க‌ட்டிப் போட்டாலும் ம‌ன‌மென்ன‌வோ ஆமோதித்து அசை போட‌த் துவ‌ங்கிவிடும் பின்விளைவுக‌ளை.

நிலாமகள் சொன்னது…

இங்கே
விசாலினியை
உயர்கல்வி
பயிலச்
சேர்த்துக் கொள்ள
நம் சட்டங்கள்
மறுக்கின்றன."

"ந‌ம‌து சிறுமை ந‌ம‌து அர‌சிய‌ல்"

நிலாமகள் சொன்னது…

க‌த‌ம்ப‌த்தின் முத‌லிர‌ண்டு தொடுப்புக‌ள் விபூதிப் ப‌ச்சையிலையும், ம‌ருக்கொழுந்தும்.

அம்பாளடியாள் சொன்னது…

12 வயது சிறுவன்
எழுதி வெற்றி
பெற்றிருக்கிறான்.
அவனை அங்கே
Proud of Pakistan
என்று
கொண்டாடினார்கள்.
இங்கே
விசாலினியை
உயர்கல்வி
பயிலச்
சேர்த்துக் கொள்ள
நம் சட்டங்கள்
மறுக்கின்றன.

உண்மையின் தரிசனம்
அழகிய உணர்வு வரிகளாய்க்
கண்டேன் .அருமை மிக்க நன்றி
உங்கள் பகிர்வுக்கு ........