திங்கள், 7 ஜூன், 2010

முகத்தில் அடித்த அறை


காணாமல் போனவர் பற்றிய அறிவிப்பு:
-----------------------------------
படத்தில் உள்ள நபர் பெயர் : வாரன் ஆண்டர்சன்
முந்தைய தொழில் : சேர்மன்,யூனியன் கார்பைடு கார்ப்பரேஷன்

கண்டுபிடித்துக் கொடுப்பவர்களுக்கு அரசாங்கத்திடமிருந்து கீழ்கண்ட பரிசுகள்
கிடைப்பதற்கான சாத்தியங்கள் உள்ளன என்று நம்பப் படுகிறது:

1. நூறு கசையடி
2. தேசிய விரோதி பட்டம்
3. இந்திய குடிமை உரிமப் பறிப்பு

மிக நீண்ட 26 வருடங்களுக்குப் பிறகு போபால் விஷ வாயு வழக்கில் தீர்ப்பு வந்துள்ளது.
இரண்டு வருட சிறை.
ரூபாய் 25000 செலுத்தி ஜாமீனில் விடுதலை.

குறந்த பட்சம் 15000 உயிர்கள் பலி.
லட்சக்கணக்கில் பாதிக்கப் பட்டோர்.
தலைமுறையாய் தொடரும் பாதிப்பு.

இதற்கான விலை இதுதான்.

இந்தத் தீர்ப்பு நீதி துறையின் முகத்தில் அடிக்கப்பட்ட அறை என்று இந்திய தேசிய மாதர்
சம்மேளனம் தெரிவித்துள்ளது.

முகத்தில் விழுந்த அறை மட்டுமல்ல.
இதயத்தில் விழுந்த கத்திக் குத்து.

பின் குறிப்பு :
கோபத்திலோ அல்லது தற்காப்புக்காகவோ ஒரு ஆளைக் கொன்றால்
அதற்கான தண்டனை ஆயுள் தண்டனையாகவோ அல்லது மரண
தண்டனையாகவோ இருக்கலா.

அக்கறையின்மையால் லட்சக் கணக்கில் ஆட்கள் கொல்லப்பட்டாலும்
அதற்கான அதிகபட்ச தண்டனை இரண்ண்டு ஆண்டுகள் தண்டனை
மற்றும் அபராதம்.

பாரத தேசம் என்று கும்மியடி.

10 கருத்துகள்:

சின்னப்பயல் சொன்னது…

பாரத தேசம் என்று கும்மியடி.

ஹேமா சொன்னது…

இங்கே பணமும் அரசியலும் கலந்திருக்கு.
கண்டுக்கமாட்டாங்க மது !
கண்டுக்கவும் கூடாது !

சுசி சொன்னது…

என்ன சொல்ல..

:(((((((((((((((

கமலேஷ் சொன்னது…

இங்க உண்மைலேயே கும்மி மட்டும்தான் அடிக்க முடியும் என்று நினைக்கிறன்..

கொற்றவை சொன்னது…

கும்மியடிப் பெண்ணே கும்மியடி. நாங்கள் மொத்தமாக விலைபோகிவிட்டோமேன்று கும்மியடி

ரோஸ்விக் சொன்னது…

வெட்ககேடு... :-(

ஹ ர ணி சொன்னது…

அன்புள்ள மதுமிதா...
நாம் ஒவ்வொருநொடியும் கோபப்படுவதற்கான நிகழ்வுகள் நடந்துகொண்டேயிருக்கின்றன. ஆண்டர்சன் அரசின் அனுமதியோடுதான் தாயகம் திரும்பியதாக செய்திகளை அவரை ஏற்றிச்சென்ற விமானி தெரிவித்து உறுதிச் செய்யப்பட்டிருக்கிறது. மனம் நொந்து சாகிறது. பெற்றபெண்ணையே கர்ப்பிணியாக்கி அந்த இளம் பெண் தற்கொலை செய்துகொண்ட தேசத்தில்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். அதிகக் குற்றம் செய்வதும் அதற்கென எந்தத் தண்டனையும் பெறாததும்தான் நமது தேசத்தின் ஜனநாயகம் போலும். வருத்தமுடன். உறரணி.

ரிஷபன் சொன்னது…

என்னத்த சொல்ல..

ரிஷபன் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
ரிஷபன் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.