ஞாயிறு, 30 மே, 2010

வர்ண பேதம்

தவறுவதில்லை.
ஏழுமலையானுக்கு
லட்டு.
பழனியாண்டவனுக்கு
பஞ்சாமிர்தம்.
குழலூதுபவனுக்கு
வெண்ணெய்யும்,சீடையும்.
ஆற்றங்கரை நேசனுக்கு
கொலுக்கட்டை.
கருவேலமரக்
காட்டில்
மீசை முறுக்கி
அரிவாள்
தூக்கினவருக்கு
கண்ணில்
காட்டவேயில்லை
கள் கலயம்
கொஞ்சம்
சுருட்டுகள்
நீர் தெளிக்க
தலை
சிலுப்பும்
ஒரு கிடா.

9 கருத்துகள்:

சுசி சொன்னது…

இந்த விஷயத்தில மட்டும் கடவுள், மனுஷர்னு பேதம் பார்க்கிறதில்லை..
//வர்ணபேதம்//

நல்லா இருக்கு.

சுந்தர்ஜி சொன்னது…

கோட்டா ராஜ்யமாயிருக்கு கடவுள்களுக்கும்.வர்ணமயமான கவிதை.

Bala சொன்னது…

Nice lines. Today morning only I was thinking of these. Reflected my thoughts :)))

ஹேமா சொன்னது…

கடவுளைப் பராமரிப்பவன் மனுஷனாச்சே.
அதான் பேதம் !

Priya சொன்னது…

நன்றாக இருக்கிறது!

நந்தா சொன்னது…

really nice

அஹமது இர்ஷாத் சொன்னது…

Good one... Lines are Great..

ரிஷபன் சொன்னது…

அது கொலுக்கட்டை அல்ல..
கொழுக்கட்டை!

Matangi Mawley சொன்னது…

azhagu!