ஞாயிறு, 4 ஜூலை, 2010

தங்க மகன் விருது



" யாவரும் நலம்” சுசி அவர்கள் எனக்கு இந்த விருதைத் தந்துள்ளார்கள்.
அவர்களுக்கு என் மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த விருதை நான் ரசித்த பதிவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிகுந்த
சந்தோஷமடைகிறேன்.

சுந்தர்ஜிபிரகாஷ் - குற்றாலச் சாரலில் நனையும் அனுபவத்தைக் கொடுக்கும்
இவரது கவிதை மனசுக்காக.

ஹரணி - இலக்கியத்தில் மட்டுமல்ல அனைத்திலும் என் கூட வரும்
பிரிய சிநேகிதனுக்காக.

ரிஷபன் - கதை,கவிதை,கட்டுரை,இணையம் என அனைத்திலும்
ஜ்வலிப்பதற்காக.

கமலேஷ் - இவரது வசீகரமான கவிதைகளுக்காக.

பாலாவின் பக்கங்கள்- இவரது நுட்பமான விமர்சனப் பார்வைக்காக.

8 கருத்துகள்:

பத்மா சொன்னது…

அனைவருக்கும் வாழ்த்துக்கள்

Bala சொன்னது…

நண்பரே தங்களின் விருதுக்கு என் மனமார்ந்த நன்றிகள். விருது என்பது ஒருவரின் சாதனைக்காக கொடுப்பது. இன்னும் உருப்படியாக சாதிக்காத எனக்கு நீங்கள் கொடுத்திருப்பது சாதிக்க ஒரு உத்வேகம் கொடுப்பதற்காக என்று நினைக்கிறேன். எழுத்துக்காக என்னை ஒருவர் பாராட்டுவது இதுதான் முதல் முறை. மீண்டும் நன்றி நண்பரே...

ஹ ர ணி சொன்னது…

அன்புள்ள மதுமிதா..

நிறைந்தோடும் நதியாய் மனசு வழிகிறது. இதுதான் மனநிறைவு என்பது. உனது பெருந்தன்மைக்குப் பணிகிறேன். நன்றி.நன்றிகள்.

அன்புடன் உறரணி.

சுசி சொன்னது…

வாழ்த்துக்கள் அனைவருக்கும்.

Priya சொன்னது…

விருதுக்கு வாழ்த்துக்கள்.

கமலேஷ் சொன்னது…

தங்களின் அன்பிற்கு மிக்க நன்றி மது சார்.

பூவரச இலையை நாயனமென சுருட்டி
இசைக்கும் குழந்தையை
நல்லா வாசிக்கிரடா
என தோள் தட்டும்
ஒரு தகப்பனின் கரங்களை உணர்கிறேன்
உங்கள் விருதினில் -

மீண்டும் நன்றி மது சார்.

சுந்தர்ஜி சொன்னது…

மிகத் தாமதமாய் நுழைகிறேன் மன்னிப்புடன்.

மதுமிதா.உங்களுக்கு அளிக்கப்பட்ட ஒரு பரிசைப் பிறருடன் பகிரும் அந்தப் பொன்மனம் எனக்குப் போதும் மதுமிதா.தங்கமகன் நீங்கள்தான்.உங்கள் அன்பின் நிழலில் காய்வது சுகமாக இருக்கிறது.

தவிர பகிரப்பட்டோருக்கும், வாழ்த்திய மனங்களுக்கும் என் சிறகசைப்பு.

ரிஷபன் சொன்னது…

மதுமிதா.. முதலில் உங்களுக்கு என் வாழ்த்துகள். தகுதியான நபருக்குக் கிடைத்த அங்கீகாரம். நீங்கள் இன்னும் பல விருதுகளுக்கு சொந்தக்காரர்தான்..
எனக்கும் பகிர்ந்தளித்த பேரன்பிற்கு நன்றி.