வியாழன், 8 ஜூலை, 2010

இன்றைய கேள்விகள்

1. திரைப்பட விழாவில் கலந்துகொள்ள இலங்கைக்குச்
செல்லக் கூடாதென தடை விதித்தவர்கள் கிரிக்கெட்
விளையாடச் செல்பவர்களுக்கு என்ன அறிவுறுத்தப்
போகிறார்கள்?

2. திரைப்படத்தின் ஆணி வேர் கதை என்று படம்
பார்ப்பவர்களுக்கேத் தெரிந்திருக்கும் போது
டைரக்டர்கள் கதையை விடுத்து கதாநாயகர்கள்
பின் ஓடுவது ஏன்?

3. ஆண்டர்சனை தப்பிக்க விட்டவர்கள் அப்சலையும்
கஸாப்பையும் தண்டிக்கத் துடிக்கும் காரணம் என்ன
என்று அரசாங்கத்தைக் கேள்வி கேட்பவர்களின்
உள் நோக்கம் தான் என்ன?

4. ஒரு சித்தாந்தத்தை தழுவிக் கொண்ட அறிவுஜீவிகள்
தலைமை தவறு செய்தாலும் எதிர் கேள்வி
கேட்காதது ஏன்?

5. ஆர்.டி.ஓ மற்றும் ரிஜிஸ்ட்ரார் அலுவலகத்தில்
உபரித் தொகை கொடுக்காமல் வேலை
நடக்குமா?

பி.கு : அரசாங்கத்தைக் குறித்து ஒரு கேள்வி கூட
இல்லையே என்று ஆதங்கம் வேண்டாம்.
எது மாறக் கூடும் என்ற நம்பிக்கை
உள்ளதோ அதை பற்றி மட்டும் தான் கேள்வி.
இது இருண்மை சிந்தனை என்று எதிர்வினை
வரினும் பதிலில் மாற்றமில்லை.

4 கருத்துகள்:

சுசி சொன்னது…

ம்ம்.. இதெல்லாம் விடை இல்லா கேள்வி வகைல போய்டும்னு நினைக்கிறேன்.

ரிஷபன் சொன்னது…

அய்.. இதுக்கெல்லாம் பதில் சொல்லி மாட்டிக்க மாட்டோமே..

r.v.saravanan சொன்னது…

GOOD QUESTIONS

Ahamed irshad சொன்னது…

கேள்விக்கு பதில்தான்???


தொடர் பதிவிற்கு அழைத்துள்ளேன் உங்களை...