புதன், 14 ஜூலை, 2010

சோளகர் தொட்டி


மிகவும் தாமதமாகத்தான் ராவணன் பார்த்தேன்.
சுருக்கமாகச் சொன்னால் ஒரு கேனத்தனமானப் படம்.
புறங்கையால் தள்ள வேண்டிய படம்.
அவ்வளவே. இதுக்கா பதிவுலகில் இவ்வளவு ஆர்ப்பாட்டங்கள்.
ஒருவர் மணிரத்னம் அம்பானியின் அடிவருடி என்கிறார்.
மற்றொருவர் அரசாங்கத்தின் கைக்கூலி என்கிறார்.
பிறிதொருவரோ பார்ப்பன சதி என்கிறார்.
இந்தச் சமயத்தில் “ சோளகர் தொட்டி” ஐ நினைவு கூர்கிறேன்.
நீண்ட காலமாக மனித உரிமைச் செயல்பாடுகளில் தொடர்புடையவரான வழக்கறிஞர் ச.பாலமுருகன் எழுதியுள்ள நாவலே சோளகர் தொட்டி. இதனை நாவல் வடிவத்தில்
அமைந்த பழங்குடி மக்களின் வாழ்க்கை தொடர்பான ஒரு வரலாற்றுப் பதிவு என்றும் சொல்லலாம்.
வீரப்பன் தேடுதல் வேட்டையில் அதிரடிப்படை வனதேவதையின் குழந்தைகளாகிய
மலைவாழ் மக்களிடம் நடத்திய கொடூரங்களைப் பற்றி சொல்கிறார்.

’’எங்கேடி உன் புருஷன்? '' என்றான் அதிகாரி.

''தெரியாதுங்க''

''இவளுக்கும் கரண்ட் கொடுங்க'' என்று உத்தரவிட்டான். அவள் அச்சத்தில் பின்னே நகரும்போது போலீஸ்காரன் மெக்கர்பெட்டியிலிருந்து மின் ஒயரை எடுத்து அவன் முன்னே வந்தான். பின்னே நகர்ந்தவள் சுவர் முட்டி நின்றாள். அவளது காதுகளில்இரண்டு கிளிப்புகளும் அவளின் மார்புக் காம்புகளில் இரண்டும், பிறப்பு உறுப்பில் ஒன்றும் மாட்டப்பட்டது. மாதி கையெடுத்துக்கும்பிட்டாள். பலனில்லை. போலீஸ்காரன் மெக்கர் பெட்டியின் கைப்பிடியை நான்கு சுற்று சுற்றினான். பின் அதன் கருப்பு நிறப்பொத்தானை அழுத்தினான்.

''அட சாமி'' என அவள் அறை முழுவதும் திக்கற்று ஓடினாள். மீண்டும் மெக்கர் பெட்டியின் சுழலும் கைப்பிடி சுற்றப்பட்டது.அவள் பள்ளத்தில் வீழ்வது போல் உணர்வு கொண்டாள். மீண்டும் சுற்றப்பட்டது. அவள் தன் உடலில் நரம்புகள் ஆங்காங்கேதலை முதல் பாதம் வரை வெடித்துச் சிதறச் செய்யுமளவு வலியையும் அதிர்வையும் அனுபவித்துத் தரையில் விழுந்தாள்.

கண்ணீர் சிந்தாமல் இதனைப் படிக்க முடியாது.
அனைவரும் படிக்க வேண்டிய நாவல் இது.

ஆசிரியர் - ச.பாலமுருகன், வனம் வெளியீடு, 17, பாவடித் தெரு, பவானி - 638301.

பின் குறிப்பு : வீரப்பனை அழித்தாகி விட்டது. விருதுகளும் பெற்றாகிவிட்டது.
இருவருக்குமிடையே பாதிக்கப் பட்ட மக்களுக்கு..?
கேள்விக் குறிகளுக்கு நம் தேசத்தில் பஞ்சமில்லை.

8 கருத்துகள்:

சுந்தர்ஜி சொன்னது…

நல்ல அறிமுகம் மது.புதிய தேடல் என்பதில்லாமல் ஒரு குறிப்பிட்ட வட்டத்தைச் சுற்றியே நமது மக்களின் கவனம் இருப்பதற்கு மணிரத்னமும்,பாலமுருகனும் உதாரணம்.

Matangi Mawley சொன்னது…

oru sila nerangalil.. realityyai vida romanticism-e perithu endru thondrukirathu ippozhuthellaam.. irukkirathu. nadakkirathu. kannaith thiranthu paarthuth thaan paaraen- nee eppadippatta uyarnthathoru vaazhkai vaazhukiraai endru- ippadi pala nerangalil etho oru kural en kaathukalil kettukkondirukkirathu! athai avvapothu naan kaetkaamal irukka muyarchiththathum undu. mudiyavillai..

oru naal unavu thantha poonai- thinamum veettai valam varuvathu polaththaan nijangalum.. athai vittu vilaki oodinaalum.. nammai thuraththaamal ooyaathu!

nallathu thaan.. ennaal paarka mudikirathu... paarthuvittaayaa.. sari.. enna seiyap pogiraai endru athey kural ennaik kettu nirkirathu.. kaathilaeye reengariththukkondu!

pathil thaedukiraen..

arumai!

r.v.saravanan சொன்னது…

நல்ல இடுகை மது


வீரப்பனை அழித்தாகி விட்டது. விருதுகளும் பெற்றாகிவிட்டது.
இருவருக்குமிடையே பாதிக்கப் பட்ட மக்களுக்கு..?
கேள்விக் குறிகளுக்கு நம் தேசத்தில் பஞ்சமில்லை.

சரியா சொன்னீர்கள் மது

Madumitha சொன்னது…

நன்றி சுந்தர்ஜி.
நன்றி மாதங்கி.
நன்றி சரவணன்.

கயல் சொன்னது…

ரொம்ப வலி மிகுந்த வரிகள். நிச்சயம் படிக்கனும். நன்றி அறிமுகத்திற்கு!

ஹ ர ணி சொன்னது…

உண்மை மதுமிதா. இந்தப் போக்கு மாறவேண்டும். யோசித்தலை நிறுத்த முடியாத சிந்தனையைக் கொண்ட பதிவு. வாழ்த்துக்கள்.

Guruji சொன்னது…

சரியா சொன்னீர்கள்

ரிஷபன் சொன்னது…

தேடிப் பிடித்து படிக்கணும்..