வெள்ளி, 31 டிசம்பர், 2010



நாஞ்சில்நாடனுக்கு சாகித்ய அகாடமி விருது.
சூடிய பூ சூடற்க சிறுகதை தொகுதிக்காக.
தாமதமாக கொடுத்தாலும் தகுதியானவருக்கே.
இவரது எழுத்துக்களில் அடிநாதமாய் ஒரு
நகைச்சுவை ஓடிக்கொண்டிருக்கும்.
இவரது எழுத்துக்களின் காதலன் நான்.




டாக்டர் பினாயக் சென்னுக்கு ராய்பூர் நீதிமன்றம்
ஆய்ள்தண்டனை விதித்திருக்கிறது. ஒரு
போலியான குற்றச்சாட்டை சொல்லி.
நக்ஸல் தீவிரவாதிகளுக்கு கடித பரிவர்த்தனை
செய்து கொடுத்ததாய். முன்பு டாக்டர் சென், வேலூர்
சிஎம்சியில் பணியாற்றியவர். இவர் செய்த
ஒரே குற்றம் அரசாங்கத்தின் வெளிச்சம்
விழாத மக்களுக்கும்,குழந்தைகளுக்கும்
மருத்துவ உதவி செய்தது மட்டும் தான்.




போனி எம் ஐ இன்னமும் ஞாபகம் வைத்திருப்பவர்கள்
பாடகர் பாபி ஃபாரெல்லை மறக்க முடியாது.
டாடி கூல் மற்றும் ரிவர்ஸ் ஆஃப் தி பாபிலோன்
இன்னமும் மனசுக்குள் அதிர்ந்து கொண்டிருக்கிறது.
பாபி நேற்று மறைந்துவிட்டார்.
அவர் குரல் என்றும் நிற்கும்.

4 கருத்துகள்:

சுசி சொன்னது…

பாபி ஆத்மா சாந்தி அடையட்டும்.

ஹ ர ணி சொன்னது…

சில நேரம் விருதுகள் அதற்குரிய நிலையை அடைவதே அது தகுதியானவருக்குச் சென்று சேரும்போதுதான். திரு நாஞ்சில்நாடனுக்கு எப்போதோ வரவேண்டியது இப்போது வந்திருக்கிறது. இருப்பினும் அவர் எள்ளளவும் குறையாத தகுதிக்கு சொக்கத்தங்கம்.

அரசாங்கம் வெளிச்சம் விழாத என்பதைவிட வெளிச்சம் காட்ட விரும்பாத என்று சொல்லலாம். சென்னுக்குரிய நீதியைக் காலம் எடுத்துப் பேசும்.

பாபியின் ஒரேயொரு பாடலை ரொம்ப ஆண்டுகளுக்கு முன் கேட்ட ஞாபகம். அவரது ஆன்மா அமைதியடையட்டும்.

ரிஷபன் சொன்னது…

நாஞ்சில் நாடனுக்கு வாழ்த்துகள்.

சுந்தர்ஜி ப்ரகாஷ் சொன்னது…

விருதுதான் நாஞ்சில்நாடனுக்குத் தாமதம் என்றால் என் பதினேழு நாள் கழிந்த பின் செலுத்தும் வாழ்த்து அதை விட மோசம்.தலைகீழ் விகிதங்களிலிருந்து தொடர்கிறது அவருடனான உறவு.

ஆட்சியாளர்களிடமிருந்து விலகி நல்லது செய்பவர்களையும் விடுவதில்லை என்பதற்கு கடைசி உதாரணம் பினாயக் சென்.

போனி எம்மை யாரால் மறக்கமுடியும் மதுமிதா?அதுவும் பை தெ ரிவர்ஸ் ஆஃப் பாபிலோனின் ரிதம் என்றும் மனதை அசைப்பது.அந்தப் பாடலில் என்றும் நிலைத்திருக்கும் பாபியின் ஆன்மா.