திங்கள், 6 டிசம்பர், 2010

THE SONG OF SPARROWS



இரானிய இயக்குனர் மஜீத் மஜீதியின் மற்றுமொரு
அற்புதமான படம். நெருப்புக் கோழிப் பண்ணையில்
வேலை பார்க்கும் ஒரு கிராமத்து மனிதன் நகரத்திற்கு
வந்த பின் எவ்விதம் மாறுகிறான் என்பதைச் சொல்லும்
படம். கிட்டதட்ட இவரின் எல்லாப் படத்திலும்
குழந்தைகள் பிரதான பாத்திரம் வகிக்கிறார்கள்.
நான் ரசித்த இரண்டு விஷயங்கள்.
தந்தை வேலை முடிந்து வந்ததும் ஓடிச் சென்று
குழந்தைகள் எனக்கு என்ன வாங்கி வந்தீர்கள்
என்று ஆவலாய்க் கேட்கும் இடம்.
வாகனங்கள் விரையும் சாலையில் குழந்தைகள்
பூங்கொத்து விற்கும் இடம்.
மற்றும் பல விஷயங்கள் இந்தியச் சூழலைப்
பிரதிபலிக்கின்றன.
இவரின் " children of Heaven " திரையில்
ஒளிரும் ஒரு சொர்க்கம்.

4 கருத்துகள்:

சுந்தர்ஜி ப்ரகாஷ் சொன்னது…

திரைப்படங்களின் தொடர்பிலிருந்து வெகுதூரம் விலகி வந்துவிட்டேன்.நீங்கள் அறிமுகப்படுத்தும் புதுப்புது இயக்குனர்களும் சினிமாக்களும் மீண்டும் என்னை 80களுக்குக் கொண்டு சேர்க்கின்றன.மகிழ்ச்சியாய் இருக்கிறது மதுமிதா விலகாத உங்கள் ரசனை.

ரிஷபன் சொன்னது…

உங்கள் விமர்சனம் பார்த்து அந்தப் படம் பார்க்கும் ஆர்வமும்.. இம்மாதிரி ரசனைகளைத் தூண்டும் உங்களுக்கு நன்றியும்.

Thanglish Payan சொன்னது…

thanks for info.
Where you will get the DVD?

Madumitha சொன்னது…

நன்றி
சுந்தர்ஜி.
ரிஷபன்.
தங்கிலிஷ் பையா.
மலையெனக் குவிந்து
கிடக்கும் டிவிடிக்களில்
கிடைத்தது.
குப்பையில் கிடைத்த்
கோமேதகம்.