சனி, 26 ஜூன், 2010

அருந்ததிராயும், வாஸந்தியும்


உயிரோசையில் வாஸந்தி அவர்கள் “ அருந்ததிராய்
எழுதிய ஒரே புத்தகம் “ என்று தலைப்பிட்டு
அருந்ததியின் The God of small things பற்றி
எழுதியுள்ளார். தலைப்பிலேயே ஒரு எள்ளல்
தொனிக்கிறது. இந்த நாவல் அமெரிக்க நாவலான
TO KILL A MOCKINGBIRD ன் சாமர்த்தியமான
தழுவல் என்று ஒரு விமர்சகரிடமிருந்து
குற்றச்சாட்டு எழுந்துள்ளதாக எழுதியுள்ளார்.
அமெரிக்க நாவல்களை படிக்க விருப்பமில்லாத
அருந்த்ததி To kill a mockingbird ஐ மட்டும்
படித்திருப்பதாக ஒரு பேட்டியில் சொல்லியிருப்பதாக
விமர்சகர் குறிப்பிட்டிருப்பதாக ( எத்தனை ஆக )
வாஸந்தி சொல்கிறார். 1997 ல் வெளிவந்த
அருந்ததியின் நாவல் 1960 ல் வந்த அமெரிக்க
நாவலின் தழுவல் என்று ஒருவர் 2010 ல்
கண்டுபிடித்து சொல்லியிருக்கிறார். அதுவும்
மீள்வாசிப்பில் கண்டுபிடிக்கப்பட்டதாம். அதை
நம் வாஸந்தி எல்லோர் பார்வைக்கும் கொண்டு
செல்கிறாராம். அது மட்டுமில்லை புக்கர் பரிசு
கிடைத்ததற்கு காரணமாக அவர் சொல்வது மிகவும்
ஆபாசமாக உள்ளது. அதுவும் அவர்
சொல்லவில்லயாம். கருணையில்லாமல் யாரோ
சொன்னதாக இவர் சொல்கிறார். யாரோ
சொல்லியிருந்தாலும் ஒரு பெண் எழுத்தாளரைப்
பற்றி இன்னொரு பெண் எழுத்தாளர் இப்படி
சொல்லலாமா? எழுத்தில் பெண்,ஆண் என்று
பிரித்து பார்ப்பது ஆணாதிக்கம் என அம்பு
தொடுக்கும் புரட்சிப் புயல்கள் இதற்கு
ஆட்சேபணை தெரிவிக்க நேரிட்டாலும்
பரவாயில்லை. அருந்ததி அடுத்த நாவலை
எழுதாதற்கு காரணத்தை இந்த கும்பல்
கண்டுபிடித்துள்ளதாகவும் சொல்கிறார்.
அதனாலேயே தன்னை ஒரு சமூகப் போராளியாக
இனம் காட்டிக்கொண்டு தனது அமெரிக்க
துவேஷப் பேச்சுக்களால் கட்டுரைகளால்
உலகத்தின் கவனத்தைப் பெறப்பார்க்கிறார்.
ஏழைகளின், பழங்குடிகளின் பங்காளி என்கிறப்
போர்வையில் உலவும் ஜனநாயக விரோதி.
பயங்கரவாதி என்று வசை மாறியாக
விமர்சனங்கள் தொடர்கின்றன. இந்த வரிகளில்
ஒரு செய்தி ஒளிந்திருப்பதாகவே எனக்குப்
படுகிறது.Enron எதிர்ப்பு நர்மதா நதி அணை
எதிர்ப்பு,பழங்குடியினருக்கு ஆதரவு,
மாவோயிஸ்ட்டுகளுக்கு ஆதரவு இவைகள்தான்
அருந்ததியின் எழுத்து மீதான குற்றச்சாட்டுக்கு
உண்மையான காரணமோ என்ற கேள்வி
எழுவதை தடுக்க முடியவில்லை.
அருந்ததியின் இந்திய அரசாங்க எதிர்ப்பு
மற்றும் அமெரிக்க அரசாங்க எதிர்ப்பு
இவைகளைத் தாங்க முடியாத ஏதோ ஒரு
சக்தி இதன் பின்னாலிருக்கச் சாத்யமுண்டுதானே?
Theory of probability....
வாஸந்தி To kill a mockingbird ஐ படித்துவிட்டு
எழுதினார என்பது எனக்கு தெரியாது. ஆனால்
நான் படிக்கவில்லை.படிக்காமலே இவ்வளவா
என்ற கேள்வி எழுவது நியாயம் தான். தேடி
படித்து எழுதுவதற்கு சற்று
காலதாமதமாகிவிடலாம். சந்தேகத்தின் பெயரில்
ஆயிரம் குற்றவாளி தப்பித்துவிடலாம். ஆனால்
சந்தேகத்தின் பெயரில் ஒரு குற்றமற்றவர் கூட
தண்டிக்கப்படக் கூடாதென்பது பொது நியதிதானே?
மீண்டும் Theory of probability..
1968 ல் கீழவெண்மணியில் தீவைத்துக்
கொல்லப்பட்ட விவசாயிகளுக்காக இன்றும்
கண்ணீர் வடிக்கும் சிகப்புச் சிந்தனாவாதிகள்
2007 ல் நந்திகிராமத்தில் டாடாவுக்காக
விவசாயிகளின் மீது துப்பாக்கிச் சூடு
நடந்தபோது மேதாபட்கரையும்,அருந்ததிராயயும்
பாதிக்கப் பட்டவர்களை சந்திக்க அனுமதி தர
மறுத்த செய்தி இந்த நேரத்தில்
ஞாபகம் வருவதை தடுக்க முடியவில்லை.

"A novel of real ambition must invent
its own language,and this one does...."

- JOHN UPDIKE,THE NEW YORKER.
இது The God of small things பற்றி
அமெரிக்க பத்திரிக்கையில் வெளிவந்த குறிப்பு.

கடைசியாய் வாஸந்திக்கு ஒரு கேள்வி..
எழுத்தாளரின் ஒரே தகுதி
எழுதிக்கொண்ண்ண்ண்ண்டே இருப்பது மட்டும்தானா?

10 கருத்துகள்:

பத்மா சொன்னது…

நெத்தியடி

நான் to kill a mocking bird உம் படித்து இருக்கிறேன் .god of small things உம் படித்து இருக்கிறேன் .
என்னவோ எதோ சொல்றாங்கப்பா ....

ஹ ர ணி சொன்னது…

மதுமிதா...

மாணவனாக இருந்து படித்த காலத்தோடு ஆங்கில நாவல்களின் பரிச்சயம விட்டுப்போயிற்று. ஆனால் மொழிபெயர்ப்பில் வரும் நாவல்களை வாசித்து வருகிறேன். ஒரே சிந்தனையிலான பொருண்மை அமைவது வெகு இயல்பானது. வாஸந்தி குறிப்பிடுவதுபோன்ற குற்றச்சாட்டிற்கு உன்னுடைய பதில் வெகு நியாயமானதுதான். இதைத் தாண்டி எழுத்தாளர்கள் உலவுவதற்கும் எழுதுவதற்குமான வெளிகள் இருக்கின்றன. குண்டுச் சட்டிக்குள் குதிரையோட்டுவது என்பார்கள்..இவர்கள் இன்னும் குதிரையைக்கூடப் பார்க்கவில்லை என்பதுதான் வருத்தம். வாழ்த்துக்கள்.

கயல் சொன்னது…

நிச்சயம். ஆதரமற்ற குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாதவரை யாரும் தண்டிக்கப்படக்கூடாது. மேலும் ஒரு சந்தேகம், ஒரு புத்தகம் விருதுக்கு பரிந்துரைக்கப்படும் முன் அது பல்வேறு கலந்தாய்வுக்கும் பரிசீலணைக்கும் போய் வரும் அல்லவா? பின் எப்படி இது போலும் ...?
தவிரவும் சில பிரபலங்கள் தாங்களின் வார்த்தைக‌ளின் வீரியம் தெரியாமல் பிறரை காயப்படுத்திவிடுகிறார்கள். வருத்தத்திற்குரியது.

சுசி சொன்னது…

:))

அன்புடன் நான் சொன்னது…

டைசியாய் வாஸந்திக்கு ஒரு கேள்வி..
எழுத்தாளரின் ஒரே தகுதி
எழுதிக்கொண்ண்ண்ண்ண்டே இருப்பது மட்டும்தானா? //

இதில்,

வெறுமனே .....எழுதிக்கொண்ண்ண்ண்ண்டே இருப்பது மட்டும்தானா? என்று சேர்த்துக்கொள்ளுங்கள்.

அதுதான் சரியா இருக்கும்.

சுந்தர்ஜி சொன்னது…

அருந்ததிராயின் பங்கு எழுதுவதையும் தாண்டியது.நான் வாசிப்பதை நிறுத்தி வெகுநாட்களாகிவிட்டன.எழுத்து குறித்த அரசியல் இப்போதெல்லாம் பிரபலமாக இருப்பதாய்த் தெரிகிறது.

பெயரில்லா சொன்னது…

:))
:((
இனி என்ன எழுத ???

மங்குனி அமைச்சர் சொன்னது…

அதுத்தது ஊராவது பதிவு ,,, வாழ்த்துக்கள்

Ahamed irshad சொன்னது…

super post... congrats

ரிஷபன் சொன்னது…

எழுத்திலும் அரசியல்..