செவ்வாய், 27 ஜூலை, 2010

அலுவலகத்தில் அம்மா



ஒவ்வொரு
தொலைபேசி
அழைப்பிற்கும்
சுரக்கின்றன
மார்புகள்.

*******************

பள்ளிக்கு
அனுப்பிய
குழந்தையின்
ஞாபகத்தில்
சோறிடுகிறாள்
அலுவலக
ஜன்னலில்
துள்ளி
விளையாடும்
அணிலுக்கு.

******************

ஞாயிறு
வரை
பொறுத்திரு
கண்ணே.
முத்த மழை
பொழிந்து
கொள்ளலாம்.

16 கருத்துகள்:

ஹேமா சொன்னது…

ஒரு தாயின் ஏக்கம் அத்தனை வரிகளிலும் மது !

'பரிவை' சே.குமார் சொன்னது…

Ammavin Vali unarthum kavithai....

http://www.vayalaan.blogspot.com

சுசி சொன்னது…

என்னை அறியாம ஒரு பெருமூச்சு வந்தது.. படிச்சு முடிச்சதும்..

Unknown சொன்னது…

எம்மாடி.. கொல்றீங்களே... ரொம்ப ரொம்ப நல்லாயிருக்கு நண்பா..

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

ஞாயிறு வரை பொறு என்றது வலி ஏற்படுத்துமொவ்வொரு தாயின் உணர்வு

ஆதவா சொன்னது…

எளிமையா அழகா சொல்லியிருக்கீங்க. கவிதைக்கு வார்த்தைகளின் கட்டுகோப்பு மிகமுக்கியம்,. அதை நல்லாவே கையாள்றீங்க.

அலுவலக நெருக்கடிகளுக்கு இடையே தாய்களுக்கு எப்பொழுதும் ஒரு நினைவு இருக்கும், அது ஏதாவது ஒரு ரூபத்தில் சில்சமயம் வெளிவந்திடும்... அணிலுக்கு சோறைப் போன்று!!

வாழ்த்துகள் மதுமிதா

Mahi சொன்னது…

அருமையான கவிதைகள்! இரண்டாவது கவிதை மனதைத்தொடுகிறது.பாராட்டுக்கள்!!

சாமக்கோடங்கி சொன்னது…

கடவுளின் படைப்பு எப்படி என்றால், நாம் எந்தப் பாதையில் நமது நிம்மதியும் இருக்கின்றது என்று ஓடுகிறோமோ, அதற்கு எதிர்த் திசையில் தான் அவைகள் இருக்கின்றன...

பாசம் ஏங்கும் உள்ளம் அங்கே..
பணத்தைத் தேடும் உள்ளம் இங்கே..
ஆக இருபுறமும் ஏக்கம் மட்டுமே மிச்சம்..

Thenammai Lakshmanan சொன்னது…

மூன்றும் அருமை மது..

vasan சொன்னது…

அப்ப‌டி ஏன்/என்ன‌ அலுவ‌ல்?
வ‌ள‌ரும் உயிருக்கு தாயே ஆதார‌ம்.
குளிர்விக்கும் தாய‌ன்பு ஏங்கி,
சுருங்க‌லாமோ, எதிர்கால‌ பூக்க‌ள்?‌

கமலேஷ் சொன்னது…

முதல் வரி மனதில் மிக ஆழமாய் பாய்கிறது நண்பரே.
மொத்தமும் ரொம்ப பிடிச்சிருக்கு..

பெயரில்லா சொன்னது…

மதுமிதா... அருமையான் கவிதை எல்லா வரிகளிலும் ஓர் அம்மாவின் மனம் தெரியறது ..பகிர்வுக்கு நன்றி

Sweatha Sanjana சொன்னது…

Speak Out !!, What you want to be in next 2 years , what your kids want to be in 10 years?. What your country should provide you ? What your business or work to be? Shape up the future, write in www.jeejix.com .

பனித்துளி சங்கர் சொன்னது…

உணர்வுகள் கசிகிறது வார்த்தைகளில் அருமை . பகிர்வுக்கு நன்றி

ரிஷபன் சொன்னது…

நல்ல கவிதையின் அடையாளம் படித்ததும் ‘ஆஹா’.. அப்புறம் லேசாய் ஒரு பொறாமை.. ‘இந்த மாதிரி எழுத வரலியே’ உங்க கவிதைகள் படிச்சதும் ஆஹா.. ம்ம்!

பத்மா சொன்னது…

அலுவலகம் செல்லும் ஒவ்வொரு தாயும் கடந்து வந்த நினைவுப்பாதை ..
வார்த்தைகளில் மிக அழகாய் ..
நன்று மதுமிதா