திங்கள், 8 மார்ச், 2010

10+2 = A Nightmare

+2 தேர்வுகள் ஆரம்பமாகி விட்டன.

பின்னிரவின் கடுங் கனவிலிருந்து
கதறிக் கொண்டு விழித்தெழும்
குழந்தையைப் போன்ற நிலையில்
மாணவ மாணவியர்கள்.

என்னாலதான் முடியல.
நீயாவது செய்.
என்னால் பிடிக்கமுடியயாத
CAT ஐ நீயாவது பிடி.
பெற்றோர்களின்
MIDDLE CLASS மனோபாவம்.

இது வரை சுமந்து வந்த
பாறாங்கல்லின் இறுதி அழுத்தம்.
LAST CRUCIFIXION.

என்ன செய்வார்கள் நம் குழந்தைகள்?

வீட்டுக்கொரு மரம்.
அது போல்
வீட்டுக்கு ஒரு Engineer
திட்டம் ஏதாவது அமுலில் உள்ளதா?

எங்களூர் பக்கம்
நகைச்சுவையாய்
சொல்வது ஒன்றுண்டு.
நிறைய பணம் இருந்தால்
நர்சரி பள்ளி ஆரம்பிக்கலாம்.
கொஞ்சம் பணம் இருந்தால்
இன்ஜினியரிங் காலேஜ்
ஆரம்பிக்கலாம்.

நமக்குத் தேவை
பொறியாளர் & கம்ப்யூட்டர்
விற்பன்னர்கள் மட்டுமல்ல.

விவசாய நிபுணர்
பொருளாதார அறிஞர்
கவிஞர்
ஓவியர்
கலைஞர்
ஆடை வடிவமைப்பவர்
மருத்துவர்
செவிலியர்
இப்படிச் சொல்லிக் கொண்டே
போகலாம்.

குழந்தைகளின்
விருப்பத்திற்கேற்ற
கல்வி கிடைக்கட்டும்.

மதிப்பெண்களுக்கான
கல்வியாய் இல்லாமல்
மனசுக்கான கல்வியாய்
இருக்கட்டும்.

நம் குழந்தைகளை
நம்மிடமிருந்து
நாமேக் காப்பாற்ற
சூளுரைப்போம்
இந்த அனல் பறக்கும்
தேர்வு தினத்தில்.

5 கருத்துகள்:

சே.குமார் சொன்னது…

naLla iruKkunga. muthaLmurai unGal thaLam parThthean. aruMai

அன்புடன் அருணா சொன்னது…

Very well said!!

Madumitha சொன்னது…

நன்றி குமார்.

Madumitha சொன்னது…

நன்றி அருணா.

ரிஷபன் சொன்னது…

நம் குழந்தைகளை
நம்மிடமிருந்து
நாமேக் காப்பாற்ற..
ஹா.. ஹா.. அப்படி இல்லை.. இப்ப நாம் வளரலியா..