வெள்ளி, 19 மார்ச், 2010

உரு மாற்றம்துளசி
மருதாணி
செம்பருத்தி
நந்தியாவட்டை
சரக்கொன்றை
நெல்லி
முருங்கை
வாழை
கிணற்றங்கரை
துவைக்கும் கல்
இளஞ்சிவப்புக் குருவி
அணில் குஞ்சு
வண்ணத்துப்பூச்சி.
அம்மாவை
ஞாபகப்படுத்தும்
அத்தனையையும்
இழந்து
வெறுங்கட்டிடமாய்
நிற்கிறதென் வீடு.

2 கருத்துகள்:

சுந்தர்ஜி சொன்னது…

ஒரு பாழடைந்த நந்தவனத்தில் நடந்தது போல இருந்தது அம்மா இல்லாத வீடு.

padma சொன்னது…

நல்லாருக்கு .நெகிழ்வா இருக்கு