ஞாயிறு, 28 மார்ச், 2010

காமம்

முதலில்
ஒரு மெல்லிய
கொசுவலையைப்
போலத்தான்
கவிழ்ந்தது.

பின்
எந்த நொடியில்
புலிக் கூண்டாய்
உரு மாறியதெனும்
புதிர் முடிச்சை
அவிழ்க்கும்
முயற்சியிலேயே
கரைந்துக்
கொண்டிருக்கிறதென்
வாலிபம்.

1 கருத்து:

padma சொன்னது…

புதிர் கிடக்கட்டும் .வாலிபம் போய்விடப்போகிறது:)