நல்ல புத்தகங்களைப் பழையப் புத்தகக் கடைகளில்
முன்பு பார்த்தால் மிகவும் சந்தோஷமாய் இருக்கும்.
இப்போது பார்த்தால் மிகவும் வருத்தமாய் இருக்கிறது.
காரணம் வயது ஏறிக்கொண்டிருப்பது மட்டுமல்ல.
தேடித் தேடி நாம் சேர்த்தப் புத்தகங்களுக்கும் இந்தக்
கதி தானோ என்ற பயமும் கூட.
நம் குழந்தைகள் இந்தப் புத்தகங்களை பாதுகாப்பார்களா?
அவர்களுக்குப் படிப்பதற்கான ஆர்வத்தை எப்படி
உண்டாக்குவது?
பள்ளிக்கூடங்கள் சகல வித்தைகளும் சொல்லித்
தருவதாய் அறிவிக்கிறார்கள்.
ஆனால் படிக்கும் பழக்கத்தை உண்டாக்குவது போல்
தெரியவில்லை. சகலத்தையும் பள்ளிதான்
சொல்லித் தரவேண்டுமா?
நம்மால் முடியாதா?
கேள்விகள் தலையைச் சுத்த வைக்கின்றன.
படிப்பு நம்மை எவ்வளவு மென்மையாகவும்,
மேன்மையகவும் ஆக்கியிருக்கிறது என்பதை
நம்மால் உணர முடிகிறது. ஆனால் அதை
எப்படி குழந்தைகளுக்குப் புரிய வைப்பது?
Spider man, Hulk, video games இன்ன பிற
சமாச்சாரங்களை புத்தகங்கள் எப்படி
வெல்லப் போகின்றன?
புத்தகங்களின் வெற்றிக்காய்ப்
பிரார்த்திப்போமாக.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
8 கருத்துகள்:
///Spider man, Hulk, video games இன்ன பிற
சமாச்சாரங்களை புத்தகங்கள் எப்படி
வெல்லப் போகின்றன? ///
mm niyayamaana kavalai
எல்லாமே பழக்கத்தில்தான்... குழந்தைப் பருவத்திலிருந்தே பழக்கப் படுத்துவோமாக.
நல்ல இடுகை
படிப்பு நம்மை எவ்வளவு மென்மையாகவும்,
மேன்மையகவும் ஆக்கியிருக்கிறது என்பதை
நம்மால் உணர முடிகிறது. ஆனால் அதை
எப்படி குழந்தைகளுக்குப் புரிய வைப்பது?
நெருடலாகத்தான் இருக்கிறது..
சார் வேர்ட் வெர்ஃபிகேசனை எடுத்துவிடுங்கள்..
நல்ல இடுகை
ஜீவன்
உழவன்
கண்ணகி
குமார்
மிக்க நன்றி.
கண்ணகி மேடம்,
நான் இதுக்கு ரொம்ப
புதுசு.
வேர்ட் வெரிஃபிகேசன் எடுக்கச்
சொல்லியிருக்கீங்க.
அப்படின்னா என்ன?
வாசிப்பை எல்லாருக்கும் கொண்டு வர முடியாது. வாசிப்பதற்காக குழந்தைகளைக் கட்டாயப்படுத்துவதில் எனக்கு உடன்பாடில்லை. விஷயங்களை அறியவும், அறிவை வளர்க்கவும் தொலைக்காட்சியும் உதவலாம்.
குழந்தைகளைக் கட்டாயப்படுத்துவது என்றில்லை.. ஆர்வமூட்டலாம்.. முதலில் கசப்பாய் தெரிந்தாலும் அதன் பயன் நிச்சயம் பின்னால் தெரியும்..
நிஜம் தான் .என்னிடம் உள்ள 1000 திற்கு மேற்பட்ட புத்தகங்களின் கதி குறித்து எனக்கு எப்பவும் ஒரு கவலை உண்டு
கருத்துரையிடுக