செவ்வாய், 16 மார்ச், 2010

chatல் வந்தவர்




ஐயா உம்ம பெயர் என்ன?
நான் நிறைய பெயரால் அழைக்கப்படுபவன்.
சரி. எதாவது ஒன்றைச் சொல்லும்?
வேண்டாம். அடையளம் தெரிந்து விடும்.
அப்ப எப்படிக் கூப்பிடுவது?
நீங்களே எனக்கு ஒரு பெயர் சூட்டுங்க.
ம்.ம்.ம்.
மத அடையாளம் இல்லாமல் ஒரு பெயர்.
உஷார் பார்ட்டிதான். சரி. திருவாளர். எக்ஸ்?
நல்லாருக்கு.
எங்கேப்பா இருக்க?
ஒவ்வொருத்தர் ஒரு இடம் சொல்றாங்க.
நீ சொல்லுப்பா.
என்னை நினைப்பவர் மனசில்.
கடவுள்னு நினைப்பா?
அப்படியே வச்சுக்கலாம்.
எத்தனை பேருய்யா இப்படிக் கிளம்பிருக்கீங்க?
கைவசம் கணக்கு இல்லே.
அப்புறம்?
வேலை ரொம்ப அலுப்பாயிடுச்சு.கொஞ்சம் relax
பண்ணிக்கத்தான் உங்க கிட்டப் பேசறேன்.
என்னாச்சு?
முன்னல்லாம் பாக்க மட்டும்தான் வருவாங்க. இப்ப
அது வேணும்.. இது வேணும்னு ரொம்ப
டார்ச்சர் பண்றாங்க.
உம்மள shopping mallனு நினைச்சிட்டாங்களா?
அப்டீன்னா?
அங்கே குண்டூசிலேர்ந்து ஏரோபிளேன் வரைக்கும்
கிடைக்கும்.
அதே.. அதே.
அப்புறம்?
உங்க பக்கம் என்னை மாதிரின்னு பல பேர் சொல்லிட்டுத்
திரியறதா கேள்விப்பட்டேன்.
யாரு?
உங்க அரசியல்வாதிகளைத்தான் சொல்றேன்.
சொல்லாதீர்யா. கேள்விப்பட்டா வந்து உம்மத்
தூக்கிடுவாங்க.
சரி. என் லைன்ல ஏதோ technical problem
போலருக்கு. சரியாக் காதுல விழல. அப்புறம் பேசலாம்.
உம்மளோட உண்மைப் பேரைச் சொல்லிட்டு வைப்பா.
@@##$$&&***
கடவுள்னு சொன்னமாதிரிதான் இருந்தது.

3 கருத்துகள்:

ரிஷபன் சொன்னது…

உம்மள shopping mallனு நினைச்சிட்டாங்களா

நிஜம்தான்.. அதனால்தான் கண்களுக்கு தென்படுவதில்லை!

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) சொன்னது…

இயல்பா இருக்கு எழுத்து. நெறைய chatting அனுபவமோ?

Madumitha சொன்னது…

ரிஷபனுக்கு...
நன்றி. உங்கள் கருத்துரை
உற்சாகமூட்டுகிறது.


அப்பாவி தங்கமணிக்கு..
மிக்க நன்றி.