செவ்வாய், 13 ஏப்ரல், 2010

இழந்த சொர்க்கங்கள்

அம்மாவின் மடி.
விடியல் வெளிச்சம்.
அஸ்தமனச் சூரியன்.
வானவில்.
மழைக் குளியல்.
பக்கத்து வீட்டுக் குழந்தையின்
புன்னகை.
எதிர் வீட்டுத் தாத்தாவின்
விசாரிப்பு.
நடு இரவு நடை.
எப்போதும் காதில்
ஒரு சங்கீதம்.
முன்னாள் காதலியின் பார்வை.
சுய நிர்வாணம்.
இழந்தவைகளின்
பட்டியல் இன்னமும்
நீளக்கூடும்.

Most of us miss out on life's big prizes.
The Pulitzer. The Nobel. Oscars. Emmys.
But we are all eligible for life's small
pleasures. Don't fret about getting life's
grand awards. Enjoy its tiny delights.
They are plenty for all of us.

நன்றி ROBIN SHARMA.

தோழர்கள் எல்லாம்
ராபின் ஷர்மாவுக்கு
ஒரு ’ஓ’ போடுங்க.

1 கருத்து:

சுந்தர்ஜி சொன்னது…

இத்தனை நாளாக உங்கள் எழுத்து.ராபின் ஷர்மாவுக்கு ஏயிலிருந்து இஸட் வரை போடலாம்.