skip to main |
skip to sidebar
மழை குறித்த அபிப்ராயங்கள்
சிறு வயதில்
தோழனாய்
இளம் வயதில்
உள்ளங்கவர் கள்ளியாய்
மத்ய வயதில்
நடைபாதைக் குழந்தைகளின்
துயில் கலைக்கும்
ராட்சஷனாய்
முதிய வயதில்
கைப் பிடித்து
அழைத்து போகும்
மரண தேவதையாய்.
மாறிக் கொண்டேதான்
இருக்கிறது
மழை குறித்த
அபிப்ராயங்களும்.
4 கருத்துகள்:
மழை மழையில் தேகத்தை நனையவிட்டு அடிக்கும் ஆட்டம் அதற்காக மழைவேண்டி..
நல்ல கவிதை
நீங்கள் தொடர்ந்து எழுதுவது சந்தோஷமாய் இருக்கிறது மதுமிதா. மழை குறித்த அபிப்பிராயங்கள் மாறினாலும் மாறாதிருப்பது உங்கள் பார்வையும் எழுதுமுறையும்.இந்தக் கவிதையும் அப்படித்தான்.
mazhai nalaerththu nam parkkum valaiel nadakkum negazugal nam karuthuklai marukenrathu
very nice mathumithaa........!
கருத்துரையிடுக