வியாழன், 29 ஏப்ரல், 2010

அடங்க மறு


மூங்கில் புதர்களைச்
சிதைத்தும்
பெருங்கிளைகளை
முறித்தும்
திரிந்த
தன்
மூதாதையரின்
ஆக்ரோஷம்
மறந்து
சில்லறைக்காய்
முதுகு
வளையும்
கோயில் யானையின்
சுதந்திரம்
ஒற்றைச் சாவியிலா?


4 கருத்துகள்:

ரிஷபன் சொன்னது…

யானைக்கு அது பிடிச்சிருக்குமோ?!

ஹேமா சொன்னது…

மது நிச்சயமாய் மறந்திருக்காது.
சூழ்நிலைக் கைதியாய் அது !

கிட்டத்தட்ட எங்களைப்போல !

அண்ணாமலை..!! சொன்னது…

சரியான கேள்வி!

இனியாள் சொன்னது…

வருத்தம் தரும் பதிவு.