வியாழன், 29 ஏப்ரல், 2010

பறக்கும் வானவில்


பட்டாம் பூச்சிகளைச்
சேகரிப்பவனின்
குறிப்பு நோட்டில்
வந்தமர்ந்த
பட்டாம் பூச்சிக்குத்
தெரிந்திருக்கக்
கூடுமோ
அதற்கு
வழங்கப்பட்ட
சுதந்திரத்தின்
மகத்துவம்.

8 கருத்துகள்:

LK சொன்னது…

nalla irukunga..

ரிஷபன் சொன்னது…

வாவ்.. அருமை..

பூமகள் சொன்னது…

உண்மை தான்... சிறகுகளின் மகத்துவம் சிறகொடிந்த கிளிக்கு மட்டுமே தெரியக் கூடுமோ??

பட்டாம்பூச்சியின் சுதந்திரமும் அதன் அற்ப வாழ் நாள் வரை தானே...

கவிதை அருமை.. படம் அதை விட அருமை மதுமிதா... ஒவ்வொரு கவிதையாக ருசித்துக் கொண்டிருக்கிறேன் உங்கள் தளத்தில்.. :)

பாராட்டுகள் தொடருங்கள்.

ஹேமா சொன்னது…

பட்டாம் பூச்சிகளைச் சேகரிப்பவன் முதலில் யோசிக்கட்டும் தன்க்கும் பட்டாம்பூச்சிக்குமான சுதந்திரத்தை !

சுந்தர்ஜி சொன்னது…

சுதந்திரம் இழந்தவந்தான் உணர்வான் அதன் மஹிமையை.

ஹேமா சொன்னது…

சுந்தர்ஜி...சரியாகச் சொன்னீர்கள்.
அதுதான் எனக்கு அந்த வரிகளின் வலி புரிந்தது.

padma சொன்னது…

நம் சுதந்திரம் நமக்கு தெரிவதில்லை

இனியாள் சொன்னது…

Nice...