திங்கள், 26 ஏப்ரல், 2010

பின் யோசனை


என்
அருகாமையில்
வரும்போது
மடியில்
வெடியைப்
பொருத்திக்
கொண்டவளைப்
போல்
பதட்டமடைகிறாய்
பெண்ணே.
முன்னரே
தெரிந்திருந்தால்
கொஞ்சம்
தள்ளிப்
போட்டிருக்கலாம்
பயமற்றக்
காதல்
இங்கே
சாத்யமாகும்வரை.

8 கருத்துகள்:

பார்வையாளன் சொன்னது…

"பயமற்றக்
காதல்
இங்கே
சாத்யமாகும்வரை"

இந்த விஷயத்தில் பயமும் ஒரு அழகு என்பதை நான் உணர்ந்து இருக்கிறேன்...

கவிதை அருமை.... சின்ன கவிதை என்றாலும், மனதை தொட்டது

DREAMER சொன்னது…

கவிதை அருமை..! காதலில் புரிந்துக்கொள்ளுதல் பயத்தை அகற்றும் என்பதை நாசூக்காக சொல்லியவிதம் அருமை..!

-
DREAMER

ஹேமா சொன்னது…

காதலை இன்னும் அழகாக்குமோ பயம் !

உணர்ந்த வரிகளோ மது !

கமலேஷ் சொன்னது…

கவிதை ரொம்ப நல்லா இருக்கு..

வாழ்த்துக்கள்...தொடருங்கள்...

சுந்தர்ஜி சொன்னது…

காதலின் அழகே பயம்தான்.பயம் இல்லாக் காதல் ருசிப்பதில்லை. நல்ல கவிதை மதுமிதா.

அஹமது இர்ஷாத் சொன்னது…

கவிதை அருமை மதுமிதா....

ரிஷபன் சொன்னது…

அதுலதான் சுவாரசியம்!

padma சொன்னது…

எல்லாரும் சொல்லிட்டாங்க அப்புறம் நான் என்ன சொல்றது?