வெள்ளி, 2 ஏப்ரல், 2010

மருதாணிபச்சையில்
எவ்விதம்
சிகப்புச்
சாத்தியமாயிற்று.
சின்ன வயசுக்
கேள்விக்கு
இன்னமும்
பதில் இல்லை.
தயவு செய்து
தாவரவியல்
நிபுணர்கள்
முயற்சிக்க
வேண்டாம்.
ஆணாயிருப்பதில்
நிறையச்
சலுகைகளும்
சவுகரியங்களும்
இருந்தாலும்
மருதாணியிட்ட
விரல்களைப்
பார்க்கும்போதெல்லாம்
பெண்ணாய்
பிறந்திருக்கலாமென
மனசு
சலனப்படுவதைத்
தவிர்க்கமுடிவதில்லை.

2 கருத்துகள்:

க.பாலாசி சொன்னது…

ஆம்பளைங்க மருதாணி போடக்கூடாதுன்னு யாரும் சொல்லலைங்களே... நானே போட்டிருக்கேன்...

கவிதை ஏக்கத்தின் பிரதிபலிப்பு... நல்லாருக்கு....

சுந்தர்ஜி சொன்னது…

மருதாணியை விடுங்கள். அவர்களுக்கேயான சௌந்தர்யங்களும்-சுகந்தங்களும் எந்த மலரில் கிடைத்துவிடும்?மருதாணி மணம் பரவுகிறது இந்தப் பக்கம்.