செவ்வாய், 13 ஏப்ரல், 2010

DROPSதொட்டிச் செடி
ஞாபகத்தில்
வறளுகிறது
சுற்றுலா.

மரங்களை
இழந்த
பறவைகளுக்கு
எவ்விதம்
சொல்வது
ஆறுதல்?

மின்சாரம்
ஷாக் அடிக்கும்.
மின் கட்டணமுமா?

தூரிகைகளின்
கல்லறையில்
ஃப்ளெக்ஸ் போர்டின்
அஞ்சலி.

திருட்டு
மின்சாரத்தில்
ஒளிர்கிறது
திருவாளர் நேர்மையின்
கட்-அவுட்.

இன்னமும்
கற்றுக்
கொள்ளவேயில்லை
ஆசிரியர்கள்
குழ்ந்தைகளிடம்.

நிலா தரிசனம்.
வாழ்க
மின் தடை.

இப்போதெல்லாம்
மழைக்குக் கூட
ஒதுங்க
முடிவதில்லை
அரசு பள்ளியில்.

தானியங்களைப்
பொறுக்க வந்த
புறாக்கள்
திகைக்கின்றன
வயல்கள்
வீட்டு மனைகளாய்
மாறியதறியாமல்.

ஜனவரி
பிப்ரவரி
மார்ச்சுவரி.

1 கருத்து:

சுந்தர்ஜி சொன்னது…

மரங்களை இழந்த பறவைகளுக்குக் கண்ணீரால் சொன்னேன் ஆறுதல்.ஒவ்வொன்றும் வீணையின் வெவ்வேறு ராகங்கள்.சுநாதம்.மனமெல்லாம் ரீங்காரம்.ஒரு பூங்கொத்து எழுதிய விரல்களுக்கு.