வியாழன், 22 ஏப்ரல், 2010

ஆதலினால் தோல்வி ஏற்பீர்


வேட்டைப்
புலியைப் போல்
துரத்தும்
உன்
நினைவுகளிலிருந்து
என்னை
விடுவித்துக் கொள்ள
எந்தக் கோப்பையிலும்
நான்
மூழ்கிவிடப் போவதில்லை.

எதிர்த்து
நின்றுப்
போரிட்டால்
எவ்வித விலங்கும்
வனம் புகும்.

இது வேட்டை
சாஸ்திரம்.

திரவமாயிருந்த
என்னைத்
திடமாய்
மாற்றிய
உனக்கு
அநேக நன்றி.

4 கருத்துகள்:

ஹேமா சொன்னது…

இனி அப்போ எதிர்த்து நிக்க வேண்டியதுதான் !

Madumitha சொன்னது…

நிக்கலாமே.
நன்றி ஹேமா.

Bala சொன்னது…

நின்று காட்ட வேண்டும்.

சுந்தர்ஜி சொன்னது…

அற்புதமான கவிதை.