சனி, 3 ஏப்ரல், 2010

தேடல்


பதில்களுக்கானத்
தேடல்
வனம் புக விடுகிறது.
சிகரம் தொட
அனுமதிக்கிறது.
சமுத்திரத்தில்
மூழ்கடிக்கிறது.
கேள்விகளின்
அலைக்கழிப்பில்
தேடல் போய்
முடிவது
மேலும்
பல கேள்விகளிடம்.

4 கருத்துகள்:

க.பாலாசி சொன்னது…

கவிதைக்குள் புதைந்திருக்கும் பதிலை எங்கு தேடுவது... அதுவும் கேள்விதான்...

நல்ல கவிதை... தொடருங்கள்... தஞ்சாவூரு வாசனையையும் அவ்வப்போது எழுத்தில் தெளித்துவிடுங்கள்....

Madumitha சொன்னது…

நன்றி.
உங்கள் பின்னூட்டம்
உற்சாகப்படுத்துகிறது.

ஹ ர ணி சொன்னது…

Dear Madumithaa,
Un ella idukaikalaium paditheen. Vegu suvaraasyam mikkavai. Tamil Font theriyaathathaal ippadi. Aaarvathai Thuundukirathu. pathivukal ellam maarupatta cinthanaiyil ullathu. nenjarntha vaazthukkal. anbudan HARANI

சுந்தர்ஜி சொன்னது…

கேள்வியின் தொடக்கமும் முடிவும் ஒரே புள்ளியில்தான் சந்திக்கின்றன.விடைகள் என்றும் எளிதானவை.கேள்விகள் என்றும் பின்தொடர்பவை.நல்ல கவிதை மதுமிதா.