ஞாயிறு, 4 ஏப்ரல், 2010

கோடைக்காலக் குற்றங்கள்


கோடை.
வழக்கம் போல் தகிக்கிறது.
’இந்த வருஷம் வெயில் அதிகம்’
வழக்கம் போல் பேசித் திரிகிறோம்.
மூச்சு முட்டும் பாடத்திலிருந்து
குழந்தைகளுக்கு விடுதலை.
பொறுக்குமா நமக்கு?
போதாக்குறைக்கு விளம்பரங்கள் வேறு.
SUMMER CAMP.
புடிச்சுப் போடுங்கடா பசங்களை.
சச்சின் போல கிரிக்கெட் ஆடணும்.
டாம் க்ரூஸ் போல பேசணும்.
அப்படியே ஷாருக்கான் மாதிரியும்.
ஷங்கர் மஹாதேவன் மாதிரிப் பாடணும்.
மைக்கேல் போல MOON WALK போகணும்.
குற்றாளீஸ்வரன் மாதிரி நீஞ்சணும்.
FITTEST CAN SURVIVE ன்னு
அப்பன், ஆத்தாக்களின் கொடுமைக்கு
ஒரு வியாக்கியானம் வேறு.
இந்த சூழலில் கலீல் கிப்ரான் ஞாபகம்
வருவதைத் தடுக்க முடியவில்லை.
குழந்தைகள் உங்களிடமிருந்து
வந்தவர்கள் இல்லை.
உங்களின் வழியாக வந்தவர்கள்.
குழந்தைகளைக் கொண்டாடுவோம்.
குழந்தைகளுடன் கும்மாளமிடுவோம்.
தகிக்கும் கோடையும்
குளிரும்
குழந்தைகளின் புன்னகையால்.

4 கருத்துகள்:

Cable சங்கர் சொன்னது…

அருமையான பதிவு..

சுந்தர்ஜி சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
சுந்தர்ஜி சொன்னது…

நாம் நிறைய மாதிரிகளை உருவாக்க முயல்கிறோம்.அவை தோல்விக்கும் பின் கசக்கும் விரக்திக்கும் இட்டுச் செல்கின்றன.மறுமுறை கிடைக்காத வாழ்வைப் பிறரைப் போல இருக்க முயற்சித்துத் தோற்கும் பிழை. அற்புதம் மதுமிதா.

உறரணி சொன்னது…

மதுமிதா,,,

நாம் குழந்தைகளைக் கவனிப்பதில்லை. குழந்தைகளுக்கென்று சரியான இலக்கியப் பதிவுகளை நாம் இன்னும் செய்யவேண்டும் என்கிற பொறுப்புணர்ச்சியை உன் பதிவு உணர்த்துகிறது. நன்றி. உறரணி.