புதன், 14 ஏப்ரல், 2010

உரிமை மீறல்

6 வயது முதல் 14 வயது வரையிலான அனைத்துக் குழந்தைகளுக்கும்
இலவச மற்றும் கட்டாய கல்வி பெறுவதற்கான அடிப்படை உரிமைச்
சட்டம் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமுலுக்கு வந்துள்ளது.
இதை அமுல் படுத்துவதில் 135 வது நாடாக பின் தங்கினாலும்
அரசுக்கு முதலில் நன்றி.
குழந்தைகள் பள்ளிக்குப் போகாததற்குக் முதல் காரணம்
வறுமை. பின் பெற்றோர்களின் அறியாமை.
அதன் பின் குழந்தைத் தொழில்.
இதற்கு அரசு என்ன செய்யப் போகிறது ?
எல்லாவற்றையும் அரசாங்கம் பார்க்க வேண்டும்
என்று நாம் சும்மா இருந்து விட முடியாது.
நமக்கும் சில சமூகக் கடமைகள் உண்டு.
ஒவ்வொரு துளியும் சமுத்ரமாய் மாறும்
சாத்தியமுண்டு.
”அகல உழுவதை விட ஆழ உழுவது பயன்”.
ஒவ்வொரு தனி மனித குழுக்கள், மற்றும்
வளமான நிறுவனங்களும் ஒவ்வொருப் பகுதியைத்
தத்து எடுத்துக்கொள்ளவேண்டும். அங்குள்ளப்
பெற்றோர்களை அடுத்தத் தளத்திற்கு
அழைத்துச் சென்றாலே பாதி பிரச்னைத்
தீர்ந்து விடும். அதற்கு முன்னதாக அவர்களின்
பொருளாதார தரத்தை மேலுயர்த்துவதற்கான
சாத்தியங்களை அவர்களுக்கு ஏற்படுத்திக்
கொடுக்கவேண்டும்.
ஆசிரியர்களுக்கு இதில் மிகவும் முக்கிய
பங்குண்டு. அவர்கள் இதை வெறும் சம்பளம்
வாங்கும் வேலையாக மட்டும் பார்க்காமல்
அதையும் தாண்டி ஆக்கப்பூர்வமாகச் செயல் பட
வேண்டும்.
சுருக்கமாகச் சொன்னால் இது ஊர் கூடி
தேர் இழுக்கும் விஷயம்.
ஆளுக்கு ஒரு கை கொடுப்போம்.

2 கருத்துகள்:

சுந்தர்ஜி சொன்னது…

கல்வி குறித்த அறிவு இன்னும் கற்கப்படவில்லை.கல்வி என்பது பள்ளியில் மட்டும் கிடைப்பது என்ற அறியாமை ஒழிந்திடவேண்டும். கல்வியின் விலை வானுயர இருத்தல் கூடாது.கல்வி அரசு மயமாக்கப்பட வேண்டும்.கல்வி கற்பிப்பவர்கள் யார் என்பதும் மதிப்பெண்கள் மீதான போதையும் நீங்கவேண்டும்.நிறைய டும் களும்,டாம் களும் தீர்மானிக்க இருக்கிறது எதிர்கால நவீன கல்வியை.பள்ளியில் மாணவிகளின் காலம் இத்தனை அதிகம் இருத்தல் கூடாது.பொதுவாக குறிப்பிட்ட சில பாடங்களில் ஆழ உழுவதை விட பரவலாக எல்லா விஷயங்களிலும் அவர்களின் கவனம் சிதற வேண்டும்.இப்போதைக்கு பெருமூச்சு விட்டுக்கொள்ளலாம்.