வியாழன், 15 ஏப்ரல், 2010
திரை கடலோடியவர்கள்
சொந்த மண்ணைப் பிரிந்து தொலை தூரம்
சென்று இவர்கள் அடைந்தது என்ன?
பணம்.
பணம் மட்டும் தான் மனிதனின் சந்தோஷமா?
ஆம் என்று சொல்பவர்கள் சற்று விலகிவிடுங்கள்.
இவர்கள் இழந்ததை பட்டியலிட்டால்
நீண்டு விடும் சாத்தியமுண்டு.
அதற்கு முன்பாக சொலவதற்கு ஒன்றுண்டு.
எந்த மண்ணின் வீரியம் உறிஞ்சி வளர்ந்தோமோ
அந்த மண்ணிற்கே பூக்களையும், கனிகளையும்
கொடுப்பதுதானே சரி.
அதை விடுங்கள்.
இவர்களின் சுற்றத்தினர்களால் இவர்கள்
உறிஞ்சப்படுவதை இவர்களே அறிவதில்லை.
அறியும் நேரத்தில் எல்லாம் கை மீறி
விடுகிறது.
மற்றொன்று.
இவர்கள் மத்ய வயதைத் தாண்டியதும்
இவர்களுக்குள் சலன வட்டங்கள்.
குழந்தைகள் எந்த சாயலில் வளர்வார்கள்?
?????????????
மண்டையைப் பிறாண்ட ஆரம்பித்து விடுகிறது.
முள் கிரீடம்.
துறக்கமுடியுமா?
அதன் பின் NOSTALGIA.
எவ்விதம் விடுபடுவார்கள்?
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
4 கருத்துகள்:
கடல் கடந்து சென்றவர்களின் சந்ததியினர் தன் இனத்தின் அடையாளத்தை தொலைத்து விடுகிறார்கள். இது வேதனையான உண்மை.
நல்ல அலசல். உண்மையான கருத்துக்கள்
வாழ்த்துக்கள் நண்பரே..
வணக்கம் மது.உங்கள் ஏப்ரல் மாத அத்தனை பதிவுகளும் பார்த்தேன்.
ஒவ்வொரு கவிதையிலும் ஒரு விஷயம் யதார்த்தம்.அருமை.
ரசித்தேன்.மனதைத் தொட்டவையும் சில.உங்கள் அனுமதியோடு இன்னும் வருவேன்.வாழ்த்துக்கள்.
நன்றி பாலா.
நன்றி ஹேமா. தங்கள் வருகைக்கு
வந்தனம்.
திரைகடலோடியவர்களை பற்றி ரொம்ப மொக்கையா சொல்லியிருக்கீங்க மதுமிதா . \அவுங்களோட துயரத்த ஒரு சதவீதம் கூட இந்த பதிவு வெளிப்படுத்தவில்லை.
கருத்துரையிடுக