வியாழன், 6 மே, 2010

மாலை நேரத்து மயக்கம்இங்கே ஆட்கள்
வேலை செய்கிறார்கள்.
இங்கே வேலைக்கு
ஆட்கள் தேவை.
இத்தகைய
விளம்பரப் பலகைகள்
தேவையில்லை.
மாத சம்பளம்
இல்லை.
வருடாந்தர
ஊக்கத் தொகை
இல்லை.
ஊதியத்துடன்
விடுப்பு
இல்லை.
வேலை நிறுத்தம்
இல்லை.
அனல்மூட்டும்
சங்கம்
இல்லை.
என்ன..
இனி வரும்
ஒரு
சாயங்காலத்தில்
என் குரல்வளையை
நசுக்கும்
எந்திரனைத்
தடுக்க
யாதொரு
மனிதனும்
இருக்கப்
போவதுமில்லை.

3 கருத்துகள்:

ஹேமா சொன்னது…

மது எப்பிடியெல்லாம் யோசிக்கிறீங்க.
சிரிக்க வேணாம்ன்னு இருக்கிறன்.
சுந்தர்ஜி பகிடி பண்ணுவார் !

இனியாள் சொன்னது…

வருத்தம் தரும் இயந்திரமயமான வாழ்வின் புலம்பல், நல்ல இருக்கு.

ரிஷபன் சொன்னது…

ம்.. வாழ்க்கையின் அடுத்த கட்டம்..