செவ்வாய், 18 மே, 2010

T200


+2 தேர்வு முடிவு வெளியாகி
விட்டது.
மதிப்பெண் பட்டியலை
வைத்துக் கொண்டு
வீதிக்கு இரு பெற்றோர்கள்
புலம்பிக் கொண்டு
நிற்கிறார்கள்.
சிலபஸுக்கு வெளிய கேள்வி
கேட்டுட்டாங்க.
தப்பான கணக்கு கேட்டுட்டாங்க.
அந்த ஊர் டீச்சர் ஸ்ட்ரிக்டாத்
திருத்திட்டாங்க.
CEO ஆபிஸ் வாசலில்
நீளமான க்யூ.
நிழல் அச்சுத் தாளை
வாங்குவதற்கு.
மறு பக்கம்.
தனியார் பொறியியல்
கல்லூரியின் அட்டகாசம்.
அப்ளிகேஷன் குறைந்த பட்சம்
500 ரூபாய்.
டிசிஎஸ் ல கூப்டாக..
விப்ரோ ல கூப்டாக..
இன்ஃஃபோசிஸ் ல கூப்டாக..
இப்படி தப்பாட்டம் வேற.
தாய்மார்களே..
தந்தைமார்களே...
உங்கள் குழந்தையின்
மனசோடு பேசி
முடிவெடுங்கள்.
ஆகாசம் அளவு
வாய்ப்புகள் உள்ளன.

6 கருத்துகள்:

ஹேமா சொன்னது…

ம்...நல்லதொரு அறிவிறுத்தல்.உண்மையும்கூட.

padma சொன்னது…

சரி தான் ,பெற்றோருக்கு புரியணுமே

சுசி சொன்னது…

//மனசோடு பேசி
முடிவெடுங்கள்.
ஆகாசம் அளவு
வாய்ப்புகள் உள்ளன.//

சரியா சொன்னிங்க.

Madumitha சொன்னது…

நன்றி..
ஹேமா
பத்மா
சுசி.

சுந்தர்ஜி சொன்னது…

கடந்த 50 வருஷங்களாக முதலிடம் பெற்றவர்கள் எங்கே போனார்கள்?
வாழ்க்கையில் வெற்றி பெற்று விட்டதாக் சொல்லப்படும் நான் ஜஸ்ட் பாஸ் கேஸ்.மீடியாக்களிலும் கேக் ஊட்டி விடும் படங்களும் டாக்டர்-எஞ்சினீயர் புருடாக்களையும் அறவே ஒழித்தல் நலம்.ஆண் எத்தனை சதம்-பெண் எத்தனை சதம்-தூக்கில் தொங்கியவர்கள் எத்தனை சதம் என்று இன்னும் எத்தனை காலம் எழுதுவார்களோ?வெறுப்பாக இருக்கிறது இந்த விட்டில் பூச்சிகளைப் பார்க்க.

வால்பையன் சொன்னது…

//தாய்மார்களே..
தந்தைமார்களே...
உங்கள் குழந்தையின்
மனசோடு பேசி
முடிவெடுங்கள்.//


அப்படி மட்டும் நடந்துட்டா நாடு எப்பவோ முன்னேறியிருக்குமே!